பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா: 3-வது முறையாக ஜூன் 8-ல் பதவியேற்பு
புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது. இந்நிலையில், மத்தியில் … Read more