டிஎன்பிஎல்: சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

சேலம், டி.என்.பி.எல். தொடரில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே நெல்லை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் 12 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் டக் அவுட்டிலும், நிதிஷ் ராஜகோபால் … Read more

சச்சின் ரதி அசத்தல் பந்துவீச்சு.. சேலம் 126 ரன்கள் சேர்ப்பு

சேலம், டி.என்.பி.எல். தொடரில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே நெல்லை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் 12 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் டக் அவுட்டிலும், நிதிஷ் … Read more

எவின் லூயிஸ் அதிரடி.. அயர்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன எவின் … Read more

ஆஸி.முன்னாள் வீரர் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த டெஸ்ட் அணி.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்

சிட்னி, நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் 21-ம் நூற்றாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த பிளெயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் அதிகபட்சமாக 5 ஆஸ்திரேலிய வீரர்களை தேர்வு செய்துள்ளார். அத்துடன் 2 … Read more

மீண்டும் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித்! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இருவரும் ஓய்வை அறிவித்து உள்ளனர். குறிப்பாக விராட் கோலி இன்னும் ஓராண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற பிறகு … Read more

குயின்ஸ் கிளப் டென்னிஸ்: டாட்ஜானா மரியா சாம்பியன்

லண்டன், பல நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாட்ஜானா மரியா (ஜெர்மனி), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரியா 6-3 மற்றும் 6-4 என்ற நெர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். 1 More update தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம்! இந்த இந்த விதிகள் இல்லை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று பார்மட்டுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் ஒரு வீரருக்கு அடிபட்டால் மாற்று வீரர்களை கொண்டு வருவது, ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்துகளை பயன்படுத்துவது போன்ற விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐசிசி. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு அணிகளுக்கும் போட்டி சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிகளை … Read more

இந்தியா vs நியூசிலாந்து 2026 போட்டி அட்டவணை – 15 வருடங்களுக்கு பிறகு வதோதராவில் சர்வதேச போட்டி!

India vs New Zealand 2026 schedule : டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதை பார்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு குட் நியூஸை கொடுத்திருக்கிறது பிசிசிஐ. இங்கிலாந்து தொடரில் இருக்கும் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  ஜனவரியில் நடக்கும் நியூசிலாந்து … Read more

இந்திய அணி செய்த பெரிய தப்பு… அதிரடி சதம் அடித்தும் ஸ்குவாடில் இடமில்லை!

India vs India A Intra Squad Match: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி நேற்றோடு (ஜூன் 14) நிறைவடைந்தது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் 27 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. India vs India A: இந்தியா – இந்தியா ஏ பயிற்சி போட்டி இத்துடன் 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சேலம், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள் குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more