சோம்பேறி சாய் சுதர்சன்.. தினேஷ் கார்த்திக் சொன்ன மாதிரி நடந்துருச்சு.. முழு விவரம்!

Sai Sudharsan: இன்று (அக்டோபர் 10) இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து தற்போது ஆடி வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 318 ரன்களை குவித்திருக்கிறது. அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல் கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். 

Add Zee News as a Preferred Source

தினேஷ் கார்த்திக் சொன்னது உண்மையானது 

ஓரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 58 ரன்களில் பிரிந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய கே.எல். ராகுல் இப்போட்டியில் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து சாய் சுதர்சன் களத்திற்கு வந்தார். இப்போட்டி இவருக்கு வாழ்வா சாவா போட்டியாக இருந்தது. அதாவது இதுவரை கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் அவர் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். மற்ற போட்டிகளில் அனைத்தும் 30, 7 என ஆட்டமிழந்ததால் இவரது இடம் நிலையற்றதாக இருந்தது. எனவே அவரை இடத்தை தக்கவைத்துக்கொள்ள அவருக்கு ஒரு பெரிய இன்னிங்ஸ் தேவைப்பட்டது. 

இந்த சூழலில், அவர் இப்போட்டியை சிறப்பாகவே விளையாடினார். நிதானமான விளையாட்டின் மூலம் அரைசதத்தை கடந்த சாய் சுதர்சன் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். முன்னதாக வர்ணனை செய்துக்கொண்டிருந்தபோது சாய் சுதர்சன் சதம் அடிக்க மாட்டார் என தெரிவித்திருந்தார். அவர் சொன்னது போலவே சாய் சுதர்சனும் 87 ரன்களில் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சோம்பேறி சாய் சுதர்சன் 

சாய் சுதர்சன் 58 ரன்களில் இருந்தபோது, ஒரு தேவையற்ற ஷாட்டை ஆடினார். அவர் பந்தை தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார். ஆனால் பந்து டாப் எட்ஜ் வாங்கி ஜோம்ல் வாரிக்கன் கைகளுக்கு சென்றது. அதிர்ஷ்டவசமாக பந்து அவரது கைகளில் இருந்து நழுவியது. அப்போது வர்ணனை செய்துக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் கோபமடைந்து சாய் சுதர்சனின் ஆட்டத்தை கடுமையாக சாடினார். 

“இது ஒரு சோம்பேறி தனமான ஷாட். அவர் வலுவான ஷாட்டை முயற்சித்திருக்க வேண்டும். அவர் இந்த ஷாட்டை ஆடிய விதம், இன்னும் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது. அவர் இன்று சதம் அடிக்காமல் போவதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவரே தான். இன்று அவருக்கு எதிராக அற்புதமாக பந்து வீசப்படும் என நினைக்கவில்லை. அவர் செய்ய வேண்டியது ஒன்றுதான். தன் மனதை கட்டுப்படுத்தி கவனம் சிதறாமல் ஆடுவதுதான்” என கூறினார். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.