டிஎன்பிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு

கோவை, 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: பிளேயிங் லெவனை உறுதி செய்த டெம்பா பவுமா

லார்ட்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த … Read more

WTC Final: ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா – பிளேயிங் லெவன், பலம், பலவீனம் என்ன?

WTC Final 2025 Preview: 2023 – 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டி நாளை (ஜூலை 11) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உடன் தென்னாப்பிரிக்கா அணி மோதும் இந்த இறுதிப்போட்டி ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதிவரை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும். புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. WTC Final 2025: இரு அணிகளும் பிளேயிங் லெவன் அறிவிப்பு இந்த போட்டிக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் … Read more

பெங்களூரு மக்கள் அனைத்து விளையாட்டையும் கொண்டாடுவார்கள்.. ராகுல் டிராவிட்!

Rahul Dravid grief: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 18 வருட காத்திருப்பு என்பதால், கோப்பையை வென்றதை அந்த அணி விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு மாறாக அசம்பாவிதமே ஏற்பட்டது.  ரசிகர்கள் அலைமோதியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். … Read more

இந்திய அணியில் இடம் இல்லை.. அதனால் இங்கிலாந்து செல்லும் சிஎஸ்கே வீரர்!

இந்திய அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளார்.  அவர் கவுண்ட் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் கோப்பைக்கும் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார். அவர் வரும் ஜூலை மாதம் ஸ்கார்பரோவில் சர்ரேக்கு எதிரான கவுண்டி போட்டிக்கு முன்பாக யார்க்ஷயர் … Read more

29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Nicholas Pooran: டி20 போட்டிகளில் சிறந்த ஒரு வீரராக இருந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 29 வயதில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்றிக் கிளாஸன் தன்னுடைய 33 வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில தினங்களில் நிக்கோலஸ் பூரன் … Read more

இந்த 3 வீரர்கள் டி20 உலக கோப்பையில் இடம் பெறுவார்கள்.. ராபின் உத்தப்பா!

2025 ஐபிஎல் தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்தது. இத்தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தனர். அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த பிரியன்ஷ் ஆர்யாவை பலரும் பாராட்டினர்.  இந்த நிலையில், … Read more

விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி! பிரச்சனைக்கு பிறகு கைமாற்ற திட்டம்!

ஐபிஎல்லில் 2008 ஆம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி. ரஜத் பட்டிதார் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஒரு வாரத்திற்குள் தங்களது அணியை விற்பனை செய்ய அணி நிர்வாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழுவதுமாகவோ அல்லது பாதி … Read more

அஸ்வின் விளையாட தடை? 30% அபராதம் விதிப்பு…! TNPL-ல் நடந்தது என்ன?

Ravichandran Ashwin Punished, TNPL 2025: ஐபிஎல் தொடரை போன்ற தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ்நாட பிரீமியர் லீக் தொடர் (Tamil Nadu Premier League) கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரின் லீக் போட்டிகள் கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 28 லீக் போட்டிகளும், 4 பிளே ஆப் போட்டிகளும் உள்பட 32 போட்டிகள் நடைபெறும்.  தற்போது முதற்கட்டமாக கோவையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. … Read more

டி.என்.பி.எல் – நெல்லையை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக கே ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிஹரன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் … Read more