இளையோர் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

பெக்கன்ஹாம், இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து … Read more

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: 7 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்காலை வீழ்த்தி ரூபி ஒயிட் டவுன் அபார வெற்றி!

ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 178 … Read more

அதில் ஆர்வம் காட்டாததே இந்தியாவின் தோல்விக்கு காரணம் – தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் விமர்சனம்

கேப்டவுன், இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 … Read more

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: போட்டிகள் எங்கே, எப்போது?

வரும் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் சேர்த்துள்ளனர். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகழ்ச்சி தரும் விதமாக உள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவிலான கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான போட்டி அட்டவணை மற்றும் மைதான குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.  போட்டி நடைபெறும் தேதி மற்றும் நேரம்  அதன்படி, 2028 ஜூலை … Read more

இந்த வீரருக்கு பதிலாக இவரை இறக்குங்க.. ரவி சாஸ்திரி!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இங்கிலாந்து முதல் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று 2-1 என்ற கணக்கில் உள்ளனர். நேற்று (ஜூலை 14) முடிவடைந்த 3வது டெஸ்ட் போட்டியில் 193 என்ற எளிய டார்கெட்டை எட்ட முடியாமல் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  … Read more

பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி பல ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, குவாலிஃபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது. இருப்பினும் இறுதி போட்டியில் சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக தோல்வி … Read more

IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?

England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தாலும் சோயப் பஷீர் முகமது சிராஜின் விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். தற்போது இங்கிலாந்த அணி 2-1 என்ற கணக்கில் … Read more

பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி

ஹராரே, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தென் … Read more

ரன் ஓடும்போது கழுத்தை பிடித்து இழுத்த பிரைடன் கார்ஸ்.. கோபத்தில் ஜடேஜா செய்த செயல்.. வீடியோ வைரல்

லண்டன், இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க … Read more

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோற்றதற்கான 5 முக்கிய காரணங்கள்..!!

India vs England Test : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 193 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்.  … Read more