வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு.. முன்னணி வீரருக்கு இடம்

செயின்ட் ஜார்ஜ், வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விரலில் ஏற்பட்ட காயத்தால் … Read more

கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர் பலி.. திருமணமாகி 10 நாட்களிலேயே நேர்ந்த சோகம்!

லிவர்பூல் கால்பந்து கிளப்பின் நட்சத்திர வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான டியோகோ ஜோட்டா ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் காலபந்து ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 28 வயதான டியோகோ ஜோட்டா ஸ்பெயினின் வடமேற்கில் உள்ள ஜமோரா என்ற இடத்தின் அருகே உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றொரு கால்பந்து வீரரும் டியாகோ ஜோட்டாவின் சகோதரருமான ஆண்ட்ரே பிலிப்பும் உயிரிழந்தார்.  டியோகோ ஜோட்டாவும், அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா … Read more

சீண்டிய ஸ்டோக்ஸ்.. பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்.. என்ன நடந்தது..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி … Read more

CSK குறிவைத்திருக்கும் அதிரடி வெளிநாட்டு வீரர்… மிடில் ஆர்டர் பலமாகும் – மினி ஏல பிளான்!

IPL 2026 CSK Squad Players List: சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தே இல்லை. இதுமட்டுமின்றி, 18 ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த அத்தனை சாதனைகளும், பெருமைகளும் ஒரே சீசனில் தவிடுபொடியாகின. எம்எஸ் தோனி (MS Dhoni) கட்டியெழுப்பிய அந்த மஞ்சள் சாம்ராஜ்யம், ஒரே சீசனில் பெரியளவில் ஆட்டம்  கண்டிருக்கிறது. IPL 2026 CSK: தோனிக்காக சிஎஸ்கே இதை செய்யுமா? தற்காலிக கேப்டனாக உள்ள வந்த தோனியால் கூட சிஎஸ்கே இந்த … Read more

கால்பந்து உலகை உலுக்கிய சம்பவம்.. கார் விபத்தில் 28 வயதான பிரபல வீரர் பலி.. ரசிகர்கள் அதிர்ச்சி

மாட்ரிட், போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோட்டா (வயது 28) ஸ்பெயினில் கார் விபத்தில் சிக்கி பலியானார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே கார் விபத்தில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துயர விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெளியான தகவலின் படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை … Read more

அப்போ கிங்… இப்போ பிரின்ஸ்… கில்லுக்கு உச்சத்தில் இருக்கிறார் சுக்கிரன் – ஏன் தெரியுமா?

Shubman Gill Century: ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் (England vs India) 2வது டெஸ்ட் போட்டி பட்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று (ஜூலை 2) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) பந்துவீச்சை தேர்வு செய்தது.  IND vs ENG: பலமான நிலையில் இந்தியா  இந்திய அணியின் (Team India) முதலில் பேட்டிங் செய்து நேற்றைய … Read more

இந்திய அணி திரும்ப திரும்ப செய்யும் தவறு… இந்த முறையும் இங்கிலாந்துக்கே வெற்றி – ஏன்?

India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம் இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை … Read more

Ind vs Eng: சதத்தை தவறவிட்டு.. ரெக்கார்ட்டை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்! ஆனா ரோகித்தின் சாதனை காலி

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (ஜூலை 2) இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய கோகோ காப்

லண்டன், ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ … Read more

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க முன்னணி வீரர் விலகல்

கேப்டவுன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகராஜ் வழிநடத்துகிறார்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டியில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு … Read more