திருச்சி | மாடு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்
திருச்சி: விருத்தாசலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்றபோது, திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்ற மாட்டின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்தது. மாடும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதனால், சுமார் 15 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. … Read more