பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டில் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் … Read more

சிறை காவலர் பணியிட மாற்ற உத்தரவை திரும்பபெற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை சிறைத்துறை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சிறைத்துறை காவலர்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகே தங்களது … Read more

கோமாளி​ என்று சொல்பவர்கள் ஏமாளி​ ஆவார்கள்: திமுக தீர்மானம் குறித்து தமிழிசை விமர்சனம்

சென்னை: எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் என தமிழிசை தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு, இனி யாரும் குற்றம் இழைக்கக் கூடாது எனும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். ஆனால், அரக்கோணத்தில் இருந்து இன்னொரு கூக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 தரும் தமிழக அரசு! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வைப்புத் தொகை கொடுக்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசுசையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய பின், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது பரவி வரும் கரோனா, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும்: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல்: அரசு, கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல் இருப்பதால் அவரது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதயநிதியின் உடல்நலம் தேறி விரைவில் குணமடைய வேண்டும் என … Read more

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையும் குறைந்தது. எங்கும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைந்துள்ளதால், வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து … Read more

உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் சந்தன் கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. … Read more

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி: நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு அவருக்கு எந்த தண்டனை குறைப்பும் செய்ய கூடாது என்று நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2024 டிசம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24-ம்தேதி புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோட்டூர்புரத்தை … Read more

“என்ன சர்க்கஸ் செய்தாலும் திமுகவினரை மக்கள் நம்ப போவதில்லை” – எல்.முருகன்

“படுத்துக்கொண்டே 200 இடங்களில் வெல்வோம் என்று ஜம்பம் பேசி வந்த மு.க.ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு, தொண்டர்கள் களப்பணியாற்றுமாறு கெஞ்சுகிறார். திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுகவினருக்கு, தனது மகனே எதிர்கால கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்திட மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை … Read more