தமிழக செய்திகள்
துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனோஜ், தனது 2 வயது பெண் குழந்தை சந்தியாவுடன், கடந்த செப்.7-ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நடுவானில் குழந்தை சந்தியாவுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் … Read more
நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 27-ம் தேதி சில இடங்களிலும், 28-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, … Read more
போக்சோ வழக்கில் இழப்பீடு தாமதம்: உள்துறை முதன்மைச் செயலருக்கு ரூ.10,000 அபராதம்
மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்காததால் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தவளைகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள். எனது 7 வயது மகளுக்கு 2020-ல் வேலுச்சாமி என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் போக்சோ … Read more
நெல்லை – சென்னை ‘வந்தே பாரத்’ ரயில்: கோவில்பட்டியில் நிற்க வைகோ வலியுறுத்தல்
கோவில்பட்டி: நெல்லை – சென்னைக்கு இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ மத்திய ரயில்வே மந்திரியிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார். நெல்லை-சென்னை இடையே ‘வந்தே பாரத்’ என்ற துரித ரயில் நாளை (செப்.,24) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்று சென்னையை சென்றடைகிறது. இந்த ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்பி … Read more
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி
மதுரை: ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் கார்வேந்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பட்டியலினத்தில் உள்ள பள்ளர் , பண்ணாடி, வாதிரியான், காலடி, குடும்பன், கடையன் மற்றும் தேவேந்திரகுலத்தான் ஆகிய ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா … Read more
“உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைப்பர்” – ஐகோர்ட்
மதுரை: “நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றம் தேவையில்லை என மக்கள் நினைக்க தொடங்குவார்கள்” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி, கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்தோம். முதலில் பகுதி நேர பணியாளர்களாகவும் பின்னர் முழு நேர பணியாளர்களாகவும் பணிபுரிந்தோம். 2018-ல் முழு நேர பணியாளர்களுக்கு மட்டுமே ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இதனால் எங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் … Read more
பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் – மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
மேட்டூர்: தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக மைசூருக்கு செல்ல வேண்டும். இதில் காரைக்காடு முதல் பாலாறு சோதனைச்சாவடி வரை சுமார் 5 கீ.மீ சாலை ஈரோடு வனக்கோட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு ஒட்டி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டம் எடப்பாடி கோட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று … Read more
‘ஊதிய நிலுவை வழங்க பணம் இல்லையெனில் பேருந்துகளை விற்றுத் தரவேண்டியது தானே!’ – உயர் நீதிமன்றம் ஆவேசம்
மதுரை: ”அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க போதுமான நிதி இல்லை என்றால் பேருந்துகளை விற்று பணம் கொடுக்க வேண்டியது தானே” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கனகசுந்தர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 1.04.2014 முதல் 31.01.2017 வரை வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதிய நிலுவை தொகை இதுவரை … Read more
தமிழகத்தில் டெங்கு பாதித்த 343 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: “ஆண்டுதோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டில் இதுவரை 4,227 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்பொழுது 343 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 நபர்கள் இறந்துள்ளனர்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அடையாறு மண்டலம், பெசன்ட் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை … Read more