சிறாவயல் மஞ்சுவிரட்டு | மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் உயிரிழப்பு

சிவகங்கை: உலகப் புகழ் பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும். முன்னதாக, மஞ்சுவிரட்டுக்காக திடலைச் சுத்தம் செய்தல், தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தைத் தயார் செய்தல் போன்ற … Read more

Special Trains: தென்மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… சென்னை வர சிறப்பு ரயில் – விவரம் உள்ளே!

Pongal Special Trains: தென்மாவட்டத்தில் இருந்து இன்று சென்னை திரும்ப திட்டமிட்ட மக்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  

தமிழக மீனவர்கள் 28 பேர் கைது; இரு தரப்பு பேச்சு நடத்தி அரசு தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 40 பேரையும், அவர்களின் படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 28 பேரை 24 மணி நேரத்தில் சிங்களக்கடற்படையினர் கைது … Read more

நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது – ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!

தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.  

சூரியூர் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 73 பேர் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில், 2 எஸ்ஐ-க்கள் உட்பட 73 பேர் காயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். கோட்டாட்சியர் பார்த்திபன் … Read more

“தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்” – தம்பிதுரை எம்.பி. வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி: தமிழ் மொழியை தேசத்தின் மத்திய ஆட்சி மொழியாக மாற்றினால் தான் மாநிலத்திற்கான உரிய பலன்கள் கிடைக்கும் என பர்கூரில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. இதில் இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, பானை உடைத்தல், கபாடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், … Read more

அடுக்குமாடிகளில் மின்கட்டண விகிதம் மாற்றப்படாததால் அதிக கட்டணம் செலுத்தும் மின்நுகர்வோர்

சென்னை: மூன்று மாடிகள் அல்லது அதற்கும் குறைவாக, லிப்ட் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள போதும், மின்வாரிய அதிகாரிகள் அதை மாற்றி அமைக்காததால், நுகர்வோர் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இது அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவுக்கும் பொருந்தியது. இந்நிலையில், மின்சார ஒழுங்குமுறை … Read more

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலை. துணைவேந்தர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகன்நாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல்தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்தநிறுவனத்தை செயல்படச் செய்ததாக பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். Source link

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி நடந்து வருகின்றன. இதில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் பங்கேற்க 6,099 காளைகள், 1,784 வீரர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. … Read more