”வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை தமிழகத்தில் டெபாசிட் வாங்கவிடக்கூடாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

திருப்பூர்: வாக்குறுதிகளை காப்பாற்றாத பாஜகவை, தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் தொட்டியபாளையத்தில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியானது திமுகவின் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை நிகழ்வில் கட்சியினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும், … Read more

மதுரை | மனிதர்களே இறங்காமல் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் ‘ரோபாட்டிக்’ இயந்திரம்

மதுரை: மனிதர்களே இறங்காமல் மாநகராட்சி பாதாள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு சென்னை ஐஐடி (Indian Institute of Technology IIT) நிறுவனம் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ரோபாட்டிக் வாகனம் மதுரை வந்துள்ளது. இந்த வாகனம், இன்று முதல் வார்டுகளில் பாதாள சாக்கடையை தூர்வாரும் பணியை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை இருக்கிறது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மதுரை மாநகரத்தில் கடந்த காலத்தில் … Read more

விருதுநகர் | பாஜக விழாவான வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி

விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி பாஜக விழாபோல் நடைபெற்றது. நாடு முழுவதும் 9 இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வந்தார். தமிழகத்தில் திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி இயக்கி வைத்தார். திருநெல்வேலியில் புறப்பட்டு இன்று பிற்பகல் 2.20 மணி அளவில் விருதுநகர் ரயில் நிலையம் வந்தடைந்தது. வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்காக … Read more

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

திருநெல்வேலி: திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல் .முருகன், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், திருநெல்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், … Read more

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை: ஜெயக்குமார்

சென்னை: “நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இப்போது எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. கூட்டணியைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18ம் தேதி எடுத்த முடிவில் மாற்றுக் கருத்து இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் … Read more

மின்கட்டண பிரச்சினை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்: அன்புமணி

சென்னை: “மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாமல், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன இதேநிலை தொடர்ந்தால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் … Read more

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்காதா? – வரிந்துகட்டும் அரசியல் கட்சிகள்

கோவில்பட்டி: சென்னை – திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இன்று (24-ம் தேதி) முதல் இயங்க உள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தைத் தொடர்ந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல … Read more

இன்று விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னை: சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று, நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் 1,500 சிலைகள் பிரம்மாண்டவையாகும். கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகள் நீர் … Read more