திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் வேலை பார்த்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டு – அண்ணாமலை கண்டனம்

சென்னை: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின், மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரதுமனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு … Read more

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – கேலோ இந்தியா போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு … Read more

களத்தில் 5,500+ பேர்… சென்னை – கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு அம்சங்கள்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜன.19) சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழகத்தின் புகழ் மகுடத்தில் மற்றும் ஒரு மாணிக்க முத்திரையாக இது அமையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023-ஐ, சென்னையில் நடத்திட … Read more

அலங்கநல்லூர் கீழக்கரை புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திறந்து வைக்கும் அலங்கநல்லூர் கீழக்கரை புதிய அரங்கில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (ஜன.19) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. அடுத்தகட்டமாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் வரும் 24-ம் தேதி ஜல்லிக்கட்டு … Read more

திமுக அரசுக்கு ‘மைலேஜ்’ கொடுக்குமா புதிய ஜல்லிக்கட்டு அரங்கு? – ஒரு விரைவுப் பார்வை

தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ‘ஜல்லிக்கட்டு’ சந்திக்காத சிக்கல்களும் அரசியலும் இல்லை. தற்போது, ஜல்லிக்கட்டுக்கு தனித்த அரங்கம் அமைத்து, ‘ஸ்கோர்’ செய்துள்ளது திமுக. 2006-ம் ஆண்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த ஒரு வழக்கில், நீதிபதி ஆர்.பானுமதி, ‘ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை’ விதித்து உத்தரவிட்டார். தடையை எதிர்த்து பல்வேறு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டமும் தமிழ்நாடு … Read more

6 புதிய மாநகராட்சிகள் உதயம் | பாதாள சாக்கடை, கார்பன் நியூட்ரல் திட்டங்கள் இருந்தும் கோட்டைவிட்ட ராஜபாளையம்

ராஜபாளையம்: காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 6 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பட்டியலில் பாதாள சாக்கடைத் திட்டம், கார்பன் நியூட்ரல் ராஜபாளையம் உள்ளிட்ட மாநகராட்சிக்குரிய திட்டங்கள் இருந்தும் ராஜபாளையம் நகராட்சி இடம் பெறாதது மக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வருவாய், மக்கள் தொகை … Read more

ஜன.19, 22, 24, 26-ம் தேதிகளில் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற ஜன.26-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 26 மற்றும் ஒத்திகை நாட்களான ஜனவரி 19, 22 மற்றும் 24 ஆம் தேதி ஆகிய 4 தினங்களுக்கு காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு … Read more

கொடநாடு கொலை வழக்கில் ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனை பெற்று தருவார்-சசிகலா

கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மறைந்த ஜெயலலிதா தெய்வமாக இருந்து நிச்சயமாக தண்டனை பெற்று தருவார்-சசிகலா கண்ணீர் மல்க பேட்டி.   

தமிழ் தெரியாத ரயில்வே பணியாளரால் வள்ளியூர் ரயில் நிலையத்தில் பயணிகள் திண்டாட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையத்தில் தமிழ் தெரியாத ரயில்வே பணியாளரால் டிக்கெட் பெறுவதில் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பொங்கல் விடுமுறைக்குப் பின் அந்தியோதயா ரயிலில் செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின்கீழ் செயல்படுகிறது. வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், இன்டர்சிட்டி ரயில்கள் உட்பட பல ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று … Read more