“ராமருக்கு இந்துக்கள் மதிப்பு கொடுப்பார்கள்; மோடி, ஆர்எஸ்எஸ், பாஜகவை ஏற்கமாட்டார்கள்” – கே.எஸ்.அழகிரி

சென்னை: ராமருக்கு இந்துக்கள் மதிப்பு கொடுப்பார்கள். பிரதமர் மோடி,ஆர்எஸ்எஸ், பாஜகவை ஏற்கமாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் அங்குள்ள கோயிலில் வழிபட அம்மாநில பாஜக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்தும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். பின்னர் அவர் … Read more

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு: மநீம தலைவர் கமல்ஹாசன் தகவல்

சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பணிகளில் அக்கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதையொட்டி, அவசர செயற்குழு, பொதுக் குழு கூட்டத்துக்கு மநீம சார்பில் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் … Read more

நீலகிரி மாவட்டம் உதகையில் 7 டிகிரி குளிர் பதிவு

சென்னை: நீலகிரி மாவட்டம் உதகையில் 7 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்குசுழற்சி நிலவுகிறது. இருப்பினும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28-ம்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை. வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் … Read more

18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: தமிழக பொது சுகாதாரத் துறை

சென்னை: இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் 18 … Read more

“அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” – கார்த்தி சிதம்பரம்

மதுரை: மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம் அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். 10 ஆண்டுகளாக பாஜக செய்த திட்டங்களில் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரின் இல்ல விழாவில் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் … Read more

“கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிப்பீர்” – தமிழக அரசுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளின் நில அழகையும், கடல் அழகையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக கோவளத்தை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவை, அப்பகுதியின் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு விளைவிப்பதாலும், வலசை வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதாலும் அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் … Read more

இது மந்திரிக்கு அழகு அல்ல – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேசி உள்ளார்.