ஏப். 4-ல் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு..!

வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் … Read more

“புதிய கல்வியாண்டு தொடங்கும் முன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குக” – அன்புமணி

சென்னை: “வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை, கல்வியாண்டு தொடங்குவதற்குள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாட்டில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது … Read more

மதுரை டைடல் பார்க்: ஆஹோ, ஓஹோன்னு வரப் போகுது… அமைச்சர் தங்கம் தென்னரசு தூள் பதில்!

தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தொடரின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, மதுரை மெட்ரோ ரயில் வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ திட்டம் வந்து என்ன பயன்? எனவே எல்லோரும் பாராட்டும் அளவிற்கு அமைச்சர் திட்டங்களை கொண்டு வர வேண்டும். மதுரை மக்கள் அனைவரும் ஆஹா, ஓஹோ என்று நமது தொழிற்துறை அமைச்சரை புகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சபாநாயகர் அப்பாவு உடனே கவுண்ட்டர் கொடுத்த சபாநாயகர் அப்பாவு, … Read more

கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.  கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10க்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகைக்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

ஏப்ரல் 3ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 3ம் தேதி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் … Read more

படுக்கையறை காட்சியில் பிரியங்கா சோப்ரா! வெளியான 'சிட்டாடல்' டிரைலர்!

இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரியங்க சோப்ராவின் சூடேற்றும் படுக்கையறை காட்சிகளுடன் உலகளாவிய புலனாய்வு தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய எபிசோடுகள , வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 முதல் மே … Read more

3 மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்திருந்த தாய்.. காரணம் என்ன.?

கன்னியாகுமரி அருகே 4 வருடங்களாக 3 மகன்களை வீட்டிலேயே பூட்டி வைத்திருந்த தாய், மீட்கச்சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரணியலைச் சேர்ந்த முருகன் – பிரேமா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், முருகன் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். பிரேமா தனது 3 மகன்களையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளதாக, பேரூராட்சி தலைவர் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது, 4 ஆண்டுகளுக்கு முன் … Read more

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘உலகப் பொதுமறையாம் திருக்குறள் நமது நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஓர் அற்புத நூல். 14 ஐரோப்பிய மொழிகளிலும், 10 ஆசிய மொழிகளிலும், 14 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஓர் உன்னத நூல். அதுமட்டுமல்லாமல் இந்த நூல் எந்த மதத்துக்கும், எந்த கடவுளுக்கும் கட்டுக்குள் அடங்காத அனைவருக்கும் பொதுவான எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சிறந்த … Read more

Kalakshetra: கலாஷேத்ரா மாணவிகள் புகார்; 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – சீமான் கண்டனம்

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்துள்ள மாணவிகள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக எம்.எல்.ஏ. பாலாஜி இன்று சட்டசபையில் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர், மத்திய அரசு நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்றும் காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்றும் குற்றசாட்டு வைத்தார். அதற்கு பதில் அளித்த முதல் … Read more