“நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்” – அமைச்சர் மா.சு அறிவிப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும் அவர் அறிவுறுத்தினார். Source link