கரோனா காலத்தில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம்: ஓபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: கரோனா காலத்தில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) நீர்வளத்துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதில், அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம், “கரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகள் மற்றும் … Read more

ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் சஸ்பெண்ட்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டவர் பல்வீர் சிங் ஐபிஎஸ். இவர் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அடுத்தகட்டமாக பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மு.க.ஸ்டாலின் விளக்கம் இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று விளக்கம் கொடுத்த மு.க.ஸ்டாலின், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிலருடைய பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தது. உடனடியாக சேரன்மாதேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவர் … Read more

கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் – ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை மண்டபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவன் படுகொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  மேலும், அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பல்லை பிடுங்கிய பல்பீர் சிங் ஐபிஎஸ் அதிகாரி குறித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கிமுத்து,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் கொண்டு வந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவையில், … Read more

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!

நீலகிரி: கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி மே 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.    நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 12வது காய்கறி கண்காட்சி … Read more

கொடூர தமிழக போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் பணியிடைநீக்கம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நெல்லை : கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூன்று இளைஞர்களை, போலீஸ் அதிகாரி ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயர் கொண்டு பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து இன்று முதல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விசாரணை கைதிகளின் பள்ளி பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து,  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரபையில் அம்பாசமுத்திரம் … Read more

நாடே எதிர்பாக்கும் தேர்தல் தேதி வெளியானது..!!

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது .224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக தேர்தல் தேதியை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கர்நாடகாவில் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக … Read more

திருவள்ளூர் | மாணவர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வினை எழுத சிறுவர் எழுச்சி மன்றம் அறிவுரை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சிறுவர் எழுச்சி மன்றம் சார்பாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு தேவையான பொருட்களை வழங்கி தேர்வை அச்சமின்றி எழுத அறிவுரை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் இளைஞர்களால் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறுவர் எழுச்சி மன்றம் தொடங்கப்பட்டது. இம்மன்றம் சிறுவர் சிறுமிகளுக்கு அறிவை வளர்ப்பதற்கு கவிதைப் போட்டி , கட்டுரை போட்டி, ஓவிய போட்டி … Read more

கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த இந்து முன்னணியின் மாவட்ட துணை தலைவர் அயோத்தி ரவி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை செய்யும் போது அவரிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உதவி மேலாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி … Read more

"கல்யாணத்திற்கு காசில்லை.. உதவாத சொந்தங்கள்" உயிரை மாய்த்த கடலூர் இளைஞர்.!

கடலூர் அருகே இளைஞர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திருமணம் நடத்த கடன் கிடைக்காததால் விரக்தியில் அந்த இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தைச் சார்ந்த  முருகேசன் என்பவனின் மகன் ரகுவரன். லாரி மெக்கானிக்கான இவருக்கும்  புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தனது தந்தை இறந்துவிட்ட … Read more