தலையில் ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தை பூட்டி அசல் கோளாறு அட்ராசிட்டி ..! போலீசார் மீது ரத்தத்தை பூசி வம்பு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்துக்கு, தலையில் ரத்தம் சொட்ட சொட்ட  வந்த இளைஞர் காவல் நிலைய இரும்பு கேட்டை இழுத்து பூட்டி ரகளை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  மதுவால் பாதை மாறி காவலர்களின் சட்டையில் ரத்ததை பூசி வம்பிழுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. காவல் நிலையத்த்தின் இரும்பு கேட்டை இழுத்து பூட்டி போலீசாரையே உள்ளே விடாமல் வெளியே தடுத்து நிறுத்தி தனது பவரை காட்டிய அன்பு இவர் தான்..! தருமபுரி மாவட்டம் … Read more

கும்பகோணத்தில் இரவு முழுவதும் செயல்படும் பார்; பெண்கள் அவதி – புகார் தெரிவித்த விவசாயிகள்

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் கடைத்தெருவில் இரவு முழுவதும் அனுமதியின்றி பார் செயல்படுவதால் பெண்கள் அவ்வழியாகச் செல்லமுடியவில்லை என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் டி. இளங்கோவன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: “திருநாகேஸ்வரம் கடைத்தெருவிலுள்ள 2 டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது … Read more

எவரெஸ்ட் ஏறும் முதல் தமிழச்சி.. யார் இவர்..? வழி அனுப்பும் தமிழக விளையாட்டு துறை..!

உலகிலேயே‌ உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை இன்று (28.03.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். 2023-ஆம் ஆண்டு ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய சென்னையைச் சார்ந்த என். முத்தமிழ்ச் … Read more

நெல்லை அருகே இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லை அருகே இடி தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தோணித்துறையில் இடிதாக்கியதில் விவசாயி சின்னராஜ் (45) உயிரிழந்துள்ளார்.

”உங்களுக்கு பரிசு வந்திருக்கு; அத வாங்கணும்னா..”-இணைய மோசடியில் ரூ.12 லட்சத்தை இழந்த பெண்!

அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்திருப்பதாகக் கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.  அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின் போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும்‌ பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். மேலும் … Read more

மதுரை சித்திரை திருவிழா: மே 5-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு.!

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் ஊர்வலம் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 28-ஆம் தேதி, தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம், நான்கு மாசி வீதிகளில் புறப்பாடு நடைபெறும் என்றும், ஏப்ரல் 30-ஆம் தேதி தங்க பல்லக்கு … Read more

ட்விட்டர் பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவரானார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக இணைந்து கட்சியை வழிநடத்தி வந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக எழுந்தது. அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியே தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் … Read more

அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியின் பெயர் மாற்றம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட முக்கிய தீர்மானங்கள்

சென்னை: அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 66 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 2023– 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (மார்ச் 28) நடந்தது. அப்போது, 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய … Read more

Breaking: ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை – ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

ஜல்லிக்கட்டு போட்டியை எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை என்று ஒன்றிய அரசு அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் மாட்டுவண்டி பந்தயத்தை கூட ஊக்கிவிக்கும் திட்டமும் இல்லை என்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் ”கேலோ இந்தியா” உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை என்றும் அந்த போட்டியை ஊக்குவிக்க அரசிடம் எந்த விருப்பமும், திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.