செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? உருளை கிழங்கில் வீடு ?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு மக்களை குடியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் பயிரிடுவது குறித்த ஆய்வுகள் தொடங்கப்பட்டு விட்டன. முதலாவதாக செவ்வாய் கிரக தட்ப வெப்ப நிலையில் பூமியில் உருளைக்கிழங்கு பயிரிட்டு சோதனை நடத்தப்படுகிறது. அதற்காக ஒரு மிகப்பெரிய ஆய்வுநிலையம் அமைக்கப்பட்டு அதில் செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த பெரிய வேலை.. இப்போ போலீஸ் தேடுகிறது..! ஜெமினி பேரனுக்கு இப்படி ஒரு நிலையா?

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், பிக்பாஸ் பிரபலமுமான அபிநய்யின் மனைவியைத் தேடி வருகின்றனர். சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து … Read more

தொழில் தொடங்க முன்அனுமதி தேவை இல்லை என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் – முதல்வருக்கு ‘டான்ஸ்டியா’ கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் அனுப்பியுள்ள கடிதம்: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்கும் கடனுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு 6 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கவேண்டும். ரிசர்வ் வங்கி அடிக்கடி ரெப்போ வட்டியை … Read more

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? இறையன்புவை டீலில் விட்ட ஆளுநர்!

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார், இறையன்புவுக்கு வேறு ஏதும் பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து கடந்த ஓரிரு மாதங்களாக கோட்டை வட்டாரங்களில் பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. தலைமைச் செயலாளருக்கான ரேஸில் சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா, பிரதீப் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இவர்களில் திறமையும் ஆற்றலும் அரசோடு … Read more

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோடைகாலம் துவங்கிய சூழலில் பொது மக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க, பலவித குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால் … Read more

'நிலக்கரி எடுத்தால் வீராணம் ஏரி பாலைவனமாகிவிடும்' – வேல்முருகன்

வீராணம் ஏரியில் நிலக்கரி தோண்டி அப்பகுதியை பாலைவனம் ஆக்க வேண்டாம் என்றும் விரைவில் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனித நேயத் திருநாள் திராவிட மாடல் _70 நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் … Read more

இன்று அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான வழக்கில் தீர்ப்பு..!!

கடந்த ஆண்டு ஜூலை 11ல், பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலர் தேர்தல் நடத்த தடை கோரியும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி, எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில், எந்த இறுதி தீர்ப்பும் வெளியாகாத நிலையில், பொதுச்செயலர் பதவிக்கான தேர்தல், வரும் 26ம் தேதி நடத்தப்படும் என, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அறிவித்தனர். அப்பதவிக்கு எடப்பாடி பழனிசாமி … Read more

தமிழகத்தில் 5 நகரங்களில் வெயில் சதம்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 28-ம் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி வேலூர், நாமக்கல், மதுரை, திருச்சி ஆகிய … Read more