தந்தையின் பராமரிப்புக்கு பணம் அளிக்காத 2 மகன்கள் கைது..!

நெல்லை அருகே பராமரிப்பு செலவுக்கு தந்தைக்கு பணம் வழங்காத 2 மகன்கள், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்த முதியவரான சுந்தரம்,தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது .ஆதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் … Read more

“100 நாள் வேலைத் திட்ட நிதி ஒதுக்கீடு… 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க இயலாது” – முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: “பாஜக ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது. இதில் கடந்த ஆண்டுகளில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதியப் பாக்கிக்காக ரூ.17 ஆயிரம் கோடி வழங்கி விட்டால், மீதியுள்ள ரூபாய் 43 ஆயிரம் கோடியை வைத்து இரு வாரங்களுக்கு கூட வேலை வழங்க இயலாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் … Read more

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவனை கொன்று புதைத்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடியில் கல்லூரி மாணவனை கொன்று புதைத்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் மாணவனை சக நண்பர்களே கொன்று புதைத்த வழக்கில் ஐயப்பன், ஆகாஷ், அபிலரசன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

”10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி”-சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி, பள்ளிக்கல்வி மற்றும் சாலை வசதிகளுக்கான  உட்கட்டமைப்புக்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார். அதன்படி, “மாநகராட்சிப் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று … Read more

தோவாளை கவிமணி மண்டபம் எப்போது தொடங்கப்படும்? தளவாய் சுந்தரம் கேள்விக்கு அமைச்சர் பதில்

தோவாளை கவிமணி மண்டபம் எப்போது தொடங்கப்படும்? தளவாய் சுந்தரம் கேள்விக்கு அமைச்சர் பதில் Source link

பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண்..!! அண்ணாமலை ட்விட்..!!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்த தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத முறைகேட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :- “டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து … Read more

ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு

ஏப்.25ஆம் தேதி யாஷிகா மீண்டும் ஆஜராக உத்தரவு பிடிவாரண்டை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் – மீண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி ஆஜராக உத்தரவு 2021ஆம் ஆண்டு யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது; அதில், காரில் சென்ற யாஷிகாவின் தோழி உயிரிழந்தார் வழக்கு தொடர்பாக ஆஜராகாத யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் நடிகை யாஷிகா ஆனந்த், வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி … Read more

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 – நிதி பற்றாக்குறை ரூ.334 கோடி; கடனுக்கான வட்டி ரூ.148 கோடி

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் 2023 – 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் … Read more

வானதி மேடம் விஷயம் தெரியாதா? கருப்பு உடையால் சிக்கல்… சட்டமன்றத்தில் ஒரே சிரிப்பலை!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இன்றைய தினம் வருகை புரிந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். எதிர்க்கட்சிகள் அமளி மேலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக சட்டப் போராட்டத்தை ராகுல் காந்தி … Read more

நெல்லையில் ரூ.3.26 கோடி மதிப்புள்ள 1,034 கிலோ கஞ்சா அழிப்பு..!!

நெல்லை: நெல்லையில் ரூ.3.26 கோடி மதிப்புள்ள 1,034 கிலோ கஞ்சாவை போலீசார் எரியூட்டி அழித்தனர். நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் முன்னிலையில் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.