குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக இந்தியருக்கு 188 மாதம் சிறை..!!

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் (34) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கோவாவைச் சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெர்னாண்டஸ் 2022-ம் ஆண்டில் டேனியல் ஸ்காட் க்ரோவுக்கு 13 சிறுவர் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. … Read more

இன்ஸ்டா காதல் இம்சை ரவுடி.. பேபி டீச்சரக்காவை போலீஸ் தேடுகின்றதாம்..! ராணுவ வீரரையே வீழ்த்திட்டாராம்.!

இண்டாகிராம் மூலம் மும்பை தமிழருடன் காதல் மொழி பேசி, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் ஸ்கோடா கார் போன்றவற்றை ஏமாற்றி பறித்ததாக கோவையை சேர்ந்த கேடி ஆசிரியை ஒருவர் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.. ஐ எம் சிங்கிள் என்று இன்ஸ்டா கிராமில் அறிமுகமாகி மும்பை தமிழருக்கு அல்வா கொடுத்த ரவுடி பேபி டீச்சரக்கா ஹசல் ஜேம்ஸ் இவர் தான்..! மும்பை செம்பூரில் வசிக்கும் டிராவல்ஸ் அதிபரின் மகன் … Read more

சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று ரூ.166 கோடியில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார். இவ்விழாவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். மயிலாடுதுறையிலுள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தை தமிழக முதல்வர் … Read more

தமிழ்நாடு வானிலை: 17 மாவட்டங்களில் கனமழை – சென்னைக்கு மிதமான மழை!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 25.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். … Read more

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் அருகே குண்டாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாம்

கொடைக்கானல்: கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் அருகே குண்டாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. குண்டாறு வனப்பகுதியில் காட்டு யானைகள் வருவது இதுவே முதன்முறை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பலியான நாமக்கல் பன்றி… எஞ்சியுள்ள பன்றிகளை அழிக்க முடிவு?

நாமக்கல்லில் உயிரிழந்த ஒரு பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கொட்டையில் வளர்க்கப்பட்ட பன்றியொன்று, கடந்த 9-ம் தேதி திடீரென உயிரிழந்தது. அந்தப் பன்றிக்கு நாமக்கல் … Read more

நன்னிலம் அருகே கணவன் மனைவி அடுத்ததடுத்து தற்கொலை – நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் சுபாஷ்-அஷ்டலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தை உள்ளது.  இந்த நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சுபாஷ் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சுபாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.  இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அஷ்டலட்சுமி … Read more

இந்த கொடுமைக்கு தீர்வு எப்போ வருமோ ?

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக மீண்டும் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் ஆன்லைன் … Read more

கடலூர் அழிய திமுக அரசு ஆதரவளிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: கடலூர் மாவட்டம் அழிய திமுக அரசு ஆதரவளிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் பொய்களை குவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது … Read more