தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த திருமாவளவன்! அரசுக்கு எதிராக நடக்கும் மாபெரும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் என அறிவிப்பு! 

தமிழ்நாடு மின்வாரியம் தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டத்தில் விசிக தொழிற்சங்கம் பங்கேற்கும் என  அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை தொகுத்தியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆண்டு கணக்கில் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது வரை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் போராட்டங்களை மின்வாரிய தொழிற்சங்கங்கள் நடத்திய பிறகும், … Read more

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 24) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, … Read more

பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதி தீப்பிடித்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயம்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். சேலம் மேட்டூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனது மனைவியின் தந்தை மற்றும் தாயாருடன் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். காரை சாந்தப்பன் என்பவர் ஓட்டிச்சென்றார். வேடசந்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. … Read more

என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அதில், “என்எல்சி நிறுவனத்தில் தற்போது 1711 காலி பணியிடங்கள் விரைவில் … Read more

ராகுல் காந்தி பதவி நீக்கம்; இது இரண்டாவது சுதந்திர போராட்டம் – ஜோதிமணி எம்பி..!

கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ” மோடி என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாக ஏன் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார். இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்தியுள்ளதாக கூறி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்திக்கு தற்போது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி ராகுல் காந்தி மக்களவை … Read more

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மலை தேனீ கொட்டியதில் காயம் அடைந்த கல்லூரி மாணவிகள் உட்பட 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம்: நீதிமன்ற நுழைவு வாயில்களில் போலீசார் தீவிர சோதனை

பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம்: நீதிமன்ற நுழைவு வாயில்களில் போலீசார் தீவிர சோதனை Source link

"வசதி கொண்ட இல்லத்தரசிகளுக்கு ₹.1000 உரிமைத்தொகை அவசியமா.?" அமைச்சர் பேட்டி.! 

கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது இல்ல பரிசுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது மேலும் இந்த உரிமை தொகையானது தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  தேர்தல் வாக்குறுதியின் போது அனைவருக்கும் உரிமை தொகை வழங்குவதாக தெரிவித்து இப்போது தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று பட்ஜெட் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் … Read more

வரும் ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

தமிழ் மாதங்களில் 12வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் இணையும் நாளில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடாப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.இந்நிலையில் பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையானது தேர்வெழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும் மாவட்ட கலெக்டர் துரை ரவிசந்திரன் அறிவித்துள்ளார். பங்குனி … Read more

சென்னை – மந்தைவெளி ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை’ பெயர் பலகையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை – மந்தைவெளியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு “டி.எம்.சௌந்தரராஜன் சாலை” எனப் பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி … Read more