ராகுல் காந்தி தகுதி நீக்கம் | புதுவை சட்டப்பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங்., வெளிநடப்பு

புதுச்சேரி: ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதம் முழுவதும் பேரவை குறிப்பிலிருந்து இறுதியில் நீக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இன்று பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் … Read more

மகளிர் உரிமைத் தொகை: ஒரு கோடி பேருக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். பரிசோதனை முயற்சியில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பிரிவினர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பும் பலனும் கிடைத்துள்ளது. வறுமையை ஒழிக்க உதவி செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த திட்டத்தால் தமிழ்நாடு எவ்வளவு பலன் அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். யார் யாருக்கு வழங்குவார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் குடும்ப செலவில் … Read more

நெல்லையில் தந்தையை கவனிக்காத மகன்கள் கைது: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு முத்துகிருஷ்ணன் முத்து மணிகண்டன் செண்பகநாதன் செந்தில் முருகன் ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். சுந்தரம் தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுந்தரம் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007 இன் கீழ் தனது மகன்கள் மீது உரிய நடவடிக்கை … Read more

கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!

செங்கல்பட்டு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவு காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Read more

“அதிமுகவில் 1 லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள்; தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி இது”-இபிஎஸ்

“அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். இந்த பழனிசாமி இல்லை என்றால் இன்னொருவர் ஆள்வார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் தொட்டு பார்க்க முடியாது” என தஞ்சையில் நடைபெற்ற  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தஞ்சை மகாராஜா திருமண மகாலில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இளைய மகனுக்கு நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, … Read more

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் திருட்டு: ஆடியோ ஆதாரத்துடன் பள்ளி கல்வித் துறை புகார்

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் திருட்டு: ஆடியோ ஆதாரத்துடன் பள்ளி கல்வித் துறை புகார் Source link

எது வீண் வதந்தி? திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொய் பேசுவது ஏன்? ஆதாரத்துடன் வெளியான பரபரப்பு அறிக்கை!

 கடலூர் மாவட்ட நிலக்கரி சுரங்கங்கள் விரிவாக்க விவகாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பொய் பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் இதுகுறித்து ஆதாரங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க போகிறது என்று பா.ம.க.வினர் கூறுகின்றனர். கீரப்பாளையம், புவனகிரி, பாளையங்கோட்டை, சேத்தியாத்தோப்பு, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், வீராணம் ஏரியையும் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த போகிறது … Read more

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் முதல்முறையாக மகளிா் ப்ரீமியா் லீக் போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்தது. அதன்படி, மகளிர் ப்ரீமியர் லீக் போட்டிகள் மார்ச் 4 முதல் 26-ம் தேதி வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் சாம்பியன் கோப்பைக்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்சும், மெக் லானிங் … Read more

“மனிதத் தன்மையற்ற செயல்” – நெல்லை காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் இதில் ஈடுபட்ட நெல்லை காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவர் ஜல்லிக்கற்களைக் கொண்டு விசாரணைக் கைதிகளைக் குரூரமாகத் தாக்கி, அவர்கள் பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பற்களை உடைத்து, வாயில் … Read more

அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் முறை: மீண்டும் சொன்ன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் தகுதியான நபர்களை பணியமர்த்துவது தொடர்பாக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவதால் பல்வேறு குளறுபடிகளும் நடைபெறுகின்றன. நில அளவையாளர், குரூப் 4 தேர்வுகளில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அடுத்தடுத்த பதிவெண் கொண்ட சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதும், ஒரே … Read more