“தமிழக பட்ஜெட் கனவு பட்ஜெட் அல்ல… காகித பூ பட்ஜெட்” – வைகைச் செல்லவன் விமர்சனம்

“நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மகளிருக்கு உதவித்தொகை வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர்” என திமுக அரசை முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அம்பத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா பேருரை ஆற்றினர். முன்னதாக சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மகளிர்க்கு தையல் எந்திரங்கள், … Read more

கடந்த ஆண்டு 2.4% தர சோதனை தோழ்வியடைந்தது: தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் சோதனை

கடந்த ஆண்டு 2.4% தர சோதனை தோழ்வியடைந்தது: தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் சோதனை Source link

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.  இதில், 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு … Read more

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு இ – மெயிலில் கொலை மிரட்டல்..!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவரது தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக பிரசாந்த் குஞ்சல்கர் கொடுத்த புகாரின் பேரில் பந்த்ரா போலீசில் புகார் செய்தார். போலீசார் ரவுடி யான பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்கள் … Read more

மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி சாமியாடி 15 அடி வரை பள்ளம் தோண்டிய பூசாரி..

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாமியாடி மண்ணுக்கு அடியில் சிலை இருப்பதாக கூறி 15அடி வரை பள்ளம் தோண்டப்பட்டதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மூடினர். வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி மொரிசியஸ் நாட்டில் உள்ள சிவன் கோவிலில் பூசாரி ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜைகளை செய்த போது திடீரென சாமி வந்து ஆடியுள்ளார். அப்போது இந்த இடத்தில் சாமி சிலை இருப்பதாகவும் இங்கு வீடு கட்ட வேண்டாம் சிலையை எடுத்து … Read more

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – சட்டப்பேரவை ஏப்.21 வரை நடைபெறும் என அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பேரவைக் கூட்டம் ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மார்ச் 21-ம் தேதி (இன்று) தாக்கல் செய்கிறார். 22-ம் … Read more

வேளாண் பட்ஜெட் 2023: விவசாயிகள் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக அரசு அமைந்ததிலிருந்து வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இரு முறை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்றாவது முறையாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேளாண் பட்ஜெட்டில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும் என்ற … Read more

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.  வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் களப்பணி அலுவலர் சுசீலா முன்னிலை வகித்தார். இதில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து கொடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு கூட்டத்தில் பெண் … Read more