நண்பர்களுடன் ஆனந்த குளியல்.! கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சோகம்..!

கீரப்பாக்கம் கல்குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பரத்(19). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சக நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பரத் கீரப்பாக்கம் கல்குவாரியில் மது அருந்தியுள்ளார். பின்பு 4 பேரும் 300 அடி ஆழம் கொண்ட கல்குவாரியில் குளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பரத் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் … Read more

மகனை 17 மணி நேரம் கேம் விளையாட வைத்த தந்தை! ஏன் தெரியுமா?

மகன் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடி வந்ததால் அவனது தந்தை அருணாச்சலம் திரைப்பட ஸ்டைலில் தண்டனை கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படத்தில் ஆசையை விட்டொழிப்பது குறித்த வசனம் இடம்பெற்றிருக்கும். அதாவது தந்தை ரஜினிகாந்த் சுருட்டு பிடிக்க ஆசைப்பட்டதால், அவரது தந்தை அறை முழுக்க சுருட்டு வாங்கி வைத்து குடிக்க வைத்தார். அதனால் தந்தை ரஜினிகாந்துக்கு சுருட்டின் மீது உள்ள ஆசையே போய்விட்டது என்று தனது மகனிடம் கூறுவார். அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது. … Read more

2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் எந்ததெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..?

தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் முக்கியத் துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விபரத்தை வெளியிட்டார். அதில்,கல்வித்துறைக்கு 47 ஆயிரத்து 266 கோடியும், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு 38 ஆயிரத்து 444 கோடியும், ஊரக வளர்ச்சி துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடியும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 19 ஆயிரத்து 465 கோடியும், மக்கள் நல்வாழ்வுக்கு … Read more

“இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகளில் ராகுல் காந்தி குரல் கொடுத்தார்” – கே.எஸ்.அழகிரி

மதுரை: “இந்திய ஜனநாயகம் காப்பாற்ற ஐரோப்பிய நாடுகளில் ராகுல் காந்தி குரல் கொடுத்தார்” என, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரி கூறினார். மதுரை திருநகரில் இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியையொட்டி காங்கிரஸ் கொடியேற்ற விழா நடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கொடியேற்றினார். மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஸ்வேதா முன்னிலை வகித்தார். மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “கேரளா, தமிழக … Read more

அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

மதுரை: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழகத்தை சீரழித்து வைத்திருந்தது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  இந்தியாவில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைத்து வருகிறது என்று ராகுல்காந்தி பேசி உள்ளார். ஜனநாயக முறைப்பாடுகளை அவர் குற்றம் சாட்டவில்லை. சிறந்த இந்திய ஜனநாயகத்தை அவர்கள் பாழ்படுத்துகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. … Read more

”வெடிமருந்து உட்கொண்ட தடயங்கள்” – பெண் காட்டு யானையின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்!

பொள்ளாச்சி அருகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டதில், யானை வெடிமருந்து உட்கொண்டதால் தான் இறந்துள்ளதாக முடிவு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் மெலிந்த நிலையில் இருந்த பெண் காட்டு யானையை வனத்துறையினர், கும்கி யானை உதவியோடு மயக்க ஊசி செலுத்தி கடந்த 17ஆம் தேதி பிடித்தனர். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதி வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் அடைத்து யானைக்கு … Read more

ஆலிவ் ரெட்லி இன ஆமை குஞ்சுகளை கடலில் விடும் விழா : மீனவர்கள் வனத்துறையினர் உற்சாகம்

ஆலிவ் ரெட்லி இன ஆமை குஞ்சுகளை கடலில் விடும் விழா : மீனவர்கள் வனத்துறையினர் உற்சாகம் Source link

#கோவை | வாயில் நாட்டு வெடி வெடித்து, 30 நாள் நீர் கூட அருந்தாமல் பலியான பெண் யானை! 

கோயம்புத்தூர் : கடந்த வாரம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றித் திரிந்தது.  வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக நீர், உணவு உண்ண முடியாமல் தவித்தவந்த யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.  யானைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அப்போதைய தகவலின்படி, நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதால், … Read more

எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அதிரடி!!

போலி சான்றிதழ் தொடர்பான புகாரில் எம்.எல்.ஏ ராஜா என்பவரின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் 2021இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேவிக்குளம் தொகுதியில் ராஜா என்பவர் போட்டியிட்டார். இவர் 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சட்டமன்றத்தில் இவர் தமிழில் பதவி பிரமாணம் எடுத்தது தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றது. இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது என தோல்வியைத் தழுவிய … Read more

தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – நிதித்துறை செயலாளர் முருகானந்தம்

2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடியாக உள்ளதாகவும் இது நடப்பு ஆண்டை விட 9.62 சதவீதம் அதிகம் என்றும் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி, கலால் வரி, வாட் வரி மற்றும் பதிவுத்துறை வரி மூலம் அதிக வருவாய் கிடைப்பதாக கூறிய … Read more