”என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. தாங்கமாட்டீங்க”-பிக்பாஸ் பிரபலத்தின் பரபரப்பு ட்வீட்!

தன்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது, ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார். அவருடைய … Read more

சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம்!!

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாளை இரவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி … Read more

அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள் – இ.பி.எஸ்

அதிமுகவில் தன்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள் என்றும், தான் இல்லை என்றாலும் இன்னொருவர் ஆள்வார் என்றும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை, அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியாது என்றார். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

ஆவியூர் ஜல்லிக்கட்டு | சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை வென்ற மாடுபிடி வீரர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளிக்காசு, கட்டில்,பீரோ உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆவியூரில் ஸ்ரீ கருப்பண்ணசாமி கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஞாயிறன்று (மார்ச் 26) ஜல்லிகட்டு நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்றன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் சுழற்சி … Read more

காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது

திண்டிவனம்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம், சூரத்தில் அவதூறு வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி. … Read more

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் : மயிலாடுதுறையில் ஓபிஎஸ் பேச்சு

அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் : மயிலாடுதுறையில் ஓபிஎஸ் பேச்சு Source link

சசிகலாவின் பேட்டிக்கு ஓபிஎஸ் பரபரப்பு பதில்!

இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம், “நாகப்பட்டினம் வந்த சசிகலா நிச்சயமாக ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பேன், அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை வலிமையான ஒரு கட்சியாக மாற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த ஓபிஎஸ் : ஆரம்பம் முதலில் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் முழுமையாக வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேளிவிகளுக்கு பதிலளித்த ஓபிஎஸ், “சாதாரண … Read more

ஊறவைத்த அரிசியை சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு!!

வீட்டில் ஊறவைத்திருந்த அரிசியை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் பகுதியை சேர்ந்த மாரிசாமி என்பவரின் மகள் நிகிதா லட்சுமி (8) அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் வீட்டில் சமையலுக்காக ஊறவைத்திருந்த அரிசியைச் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டுக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை … Read more

வடைக்கு ஆசைப்பட்டு ரூ.70 ஆயிரத்தை பறிகொடுத்த விவசாயி.. பைக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்த ஹோட்டல் தொழிலாளி கைது..!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில், வடை வாங்க சென்ற முதியவரின் இருசக்கரவாகனத்தில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்ற நபரை, சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்தனர். சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த விவசாயி வேலு, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை மீட்பதற்கு சென்றுள்ளார். ஊழியர்கள், நகையை இன்று திருப்ப முடியாது என கூறியதால், பணத்தை பைக்கிலேயே வைத்துவிட்டு, அருகிலுள்ள டீ கடைக்கு வேலு வடை வாங்க சென்றுள்ளார். வடை இல்லாததால் திரும்பி வந்த அவர், … Read more