இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர் அரியலூரை சேர்ந்த கார்த்தியை வரவேற்ற கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்து வரும் தென் மண்டல மாநிலங்கள் அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு வருகை தந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர் அரியலூரை சேர்ந்த கார்த்தியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வரவேற்றார்.

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் – குருவிக்காரர் சமூகத்தினர்… தமிழ்நாடு அரசு அரசாணை

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர் சமூகத்தினர் ஆகியோரை இணைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் நமக்கு தெரியவருவது – “நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்கள் தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் வந்துள்ளது. இந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து, பழங்குடியினர் பட்டியலில் 37-வது இனமாக சேர்த்து மத்திய … Read more

13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.! ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் கைது.!

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் சந்தோஷ் குமார் (26). இவரிடம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து சந்தோஷ் குமார், சிறுமியை பயிற்சி முடிந்து தினமும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு வந்தார். … Read more

சென்னையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தென் இந்திய கிளை: மத்திய அமைச்சரிடம் உதயநிதி நேரில் கோரிக்கை

சென்னையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தென் இந்திய கிளை: மத்திய அமைச்சரிடம் உதயநிதி நேரில் கோரிக்கை Source link

கனடாவிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்…!

இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் எண்ணிக்கை சமீப காலமாக கணிசமாக உயர்ந்துள்ளது. இதில், வட அமெரிக்க நாடான கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், போலி ஆவணங்களை சமர்பித்து கனடாவுக்கு வந்த குற்றச்சாட்டில் 700 இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரையும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விசா ஏஜென்டான பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். கனடாவில் உயர்கல்வி … Read more

பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து கலங்க வேண்டாம் – தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு குறித்து தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் நடைபெறுவதுதான் சட்ட விதி. கட்சியின் உச்சபட்ச பதவி, அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அமைப்பு ரீதியான மற்ற தேர்தல்களை நடத்த வேண்டும். … Read more

கந்தர்வகோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள ராஜாபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

Tamil news today live: அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Tamil news today live: அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை Source link

முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பணி நேரத்தை மாற்ற முடிவு..!!

பீகார் மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முஸ்லிம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தில் வழக்கமான பணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகம் வந்து வேலை முடியும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இந்த உத்தரவு நிரந்தரமாக அமலுக்கு வரும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக … Read more

தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பட ஷூட்டிங்கில், பொது மக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறித்ததால் பரபரப்பு..!

திருவண்ணாமலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது, பொதுமக்களின் செல்போன்களை பவுன்சர்கள் பறித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போது படப்பிடிப்பை பார்க்க பொதுமக்கள் பலரும் திரண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக் குழுவினர் குவிந்ததால், பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர். படப்பிடிப்புக்காக வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டதால், பணியில் இருந்த அதிகாரிகளை தேடி வந்த மக்கள் குழப்பமடைந்தனர். Source link