தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் சாட்சியம்

சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், எம்.பி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி … Read more

ஓபிஎஸ் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்; ஆறுதலும், நெகிழ்ச்சியும்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையொட்டி மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். ஓபிஎஸ் தாயார் மறைவு ஆனால் வயது முதிர்வால் எதுவும்பலனளிக்கவில்லை. இதையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தெற்கு அக்ரஹாரம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழனியம்மான் உடல் வைக்கப்பட்டது. அடுத்த நாள் … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: நிலை அறிக்கை, ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது. இந்த குடிநீரை குடித்த … Read more

தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை

தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை Source link

தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பில், “நாட்டில் 7 மாநிலங்களில் (தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம்) ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.  ‘மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும். நாட்டில் தற்போது புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த 7 ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான … Read more

திமுக எம்.பி. திருச்சி சிவாவுடன், அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..!

திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அமைச்சர் நேரு இன்று சிவாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கடந்த புதன்கிழமையன்று கே.என்.நேரு பங்கேற்ற இறகுப்பந்து அரங்கு திறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழில், சிவாவின் பெயர் இடம்பெறாதது குறித்து இருதரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி ராஜா காலனியில் சிவாவின் வீட்டிற்கு சென்ற அமைச்சர், நடந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பேட்டியளித்த கே.என்.நேரு, நடக்க கூடாத … Read more

அருப்புக்கோட்டை கூலித் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது: கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் முத்துமணி (43). கடந்த ஜனவரி 31-ம் தேதி அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அருகே உள்ள கிணற்றில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது மனைவி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் … Read more

விரைவில்… சசிகலா, டிடிவியுடன் இணையும் ஓபிஎஸ்..! 2024 க்கு முன்பு புதிய கட்சி..?

அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை பிரித்து எடுத்து டிடி வி சசிகலாவுடன் புதிய அணியில் ஐக்கியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் எடுத்தது எடப்பாடி தலைமையிலான பொதுக்குழு. மேலும், அந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து இரு தரப்பிலும் தாக்கல் செய்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளிக்க, இரு நீதிபதி அமர்வு செல்லும் என தீர்ப்பளிக்க, இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. அப்போது … Read more

கும்கி யானை உதவியுடன், காட்டு யானை வாகனத்தில் ஏற்றப்பட்டது

பொள்ளாச்சி: மேட்டுப்பாளையம் அருகே வாயில் காயத்துடன் பிடிக்கப்பட்ட காட்டு யானையை கும்கி யானை உதவியுடன், காட்டு யானை வாகனத்தில் ஏற்றப்பட்டது. பொள்ளாச்சி டாப் ஸ்லிப் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

புது பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்… கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்ட் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

புது பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்… கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்ட் திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் Source link