விருந்துக்கு அழைத்து அக்கா கணவர் செய்த செயல்- வீடு திரும்பியதும் அதிர்ந்துபோன தங்கை கணவர்

மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் இருவரையும் விருந்துக்கு வரச் சொல்லிவிட்டு அவர்கள் வந்ததும், மனைவியின் தங்கை வீட்டுக்குச் சென்று திருடிய அக்காவின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூர் அப்பாசாமி கோவில் தெருவில் வசித்து வரும் ஸ்ரீதர் மகன் நரேந்திரன் என்பவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது. நரேந்திரன் தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கே.கே. நகரில் அமைந்துள்ள மனைவியின் அக்கா வீட்டிற்கு விருந்திற்காக நரேந்திரன் சென்றுள்ளார். மதியம் விருந்து சாப்பிட்டுவிட்டு தம்பதி இருவரும் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜெயந்தின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் – டிடிவி தினகரன்.!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம் சாங்க் கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.  இதையடுத்து இந்த விமானம் பூம்டிலா மாவட்டத்தில் உள்ள மண்டலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த … Read more

காதலனின் போதைப் பழக்கம் அறிந்து காதலை கைவிட்ட நர்சிங் மாணவி.. ஆத்திரத்தில் காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன் கைது!

விழுப்புரம் அருகே தனது போதைப் பழக்கம் தெரிந்து காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞன் அவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. விக்கிரவாண்டி அடுத்துள்ள ராதாபுரத்தைச் சேர்ந்த 20 வயதான தரணி, நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். காலை வயல் பகுதிக்குச் சென்றபோது இளைஞர் ஒருவரால் தரணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில் அந்த நபர் பக்கத்து ஊரான மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த கணேசன் என்பதும், இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததும் தெரியவந்தது. கணேசனைப் பிடித்து … Read more

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடங்களை கட்டும் பொதுப்பணித் துறை: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: “பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி முகாமை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் பேசுகையில், “முதல்வரின் அறிவுரையின்படி, பலநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு, இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல கட்டடங்களை … Read more

மகளிர் காவலர்களுக்கு குட் நியூஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (17.3.2023) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேரு உள் விளையாட்டரங்கில் திரண்டிருந்த மகளிர் காவலர்களிடம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். … Read more

சிபிஐ விசாரணைக்கு மாற்றி என்ன ஆகப்போகிறது?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: புதுக்கோட்டை இடையூரில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐயில் போதிய அதிகாரிகள் இல்லை, அங்கு மாற்றி என்ன ஆகப்போகிறது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அந்த வழக்கை … Read more

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு ஒருசேர சீர்கொண்டுபோன இந்து – கிறிஸ்தவ – முஸ்லீம்கள்!

மதங்களைக் கடந்து மனித நேயத்தை உணர்த்தும் வகையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து – கிறிஸ்தவம் – முஸ்லிம் என மும்மதத்தினரும் தங்களது மத குருமார்கள் தலைமையில் ஒரு சேர மத நல்லிணக்க சீர் கொண்டு வந்தது காண்போர்களை நெகிழ வைத்தது. எம்மதமும் சம்மதமே என்றிருந்தால்.. எம்மதமும் சம்மதம் என்பதை மறந்து தம்மதமே பெரிதென நினைக்கும் போது தான் சில விபரீதங்கள் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் மதம் சார்ந்த பிரச்சனைகள் … Read more

பெண் காவலர்களுக்கான 9 அட்டகாசமான திட்டங்கள்.! முதல்வர் அறிவிப்பு.!

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பெண் காவலர்களின்  பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த விழாவின் மேடையில் பேசிய ஸ்டாலின் “ஒரு சகாப்தத்தின் பொன் விழாவில் கலைஞர் அவர்களின் மகனான நான் முதலமைச்சராக இதில்  கலந்துக்கொள்வதில் பெருமையடைகிறேன். வீட்டையும் நாட்டையும் காத்து வருகின்ற இந்த பெண் காவலர்களுக்கு நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும் அவர் ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு … Read more