தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில் சேவை இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

தமிழகத்தில் முக்கிய விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களின் நலன் கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை – கண்ணூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து … Read more

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கணவர் எடுத்த விபரீத முடிவு..!

திருவள்ளூர் மாவட்டத்தில், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இளைஞரை, போலீசார் சிறிது நேரம் காக்க வைத்ததால் அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். சின்னமாங்கோடு குப்பத்தைச் சேர்ந்த மீனவர் தர்மதுரை என்பவருக்கு சோமஞ்சேரியை சேர்ந்த ரோஜாவுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான தர்மதுரை மீன்பிடி தொழிலுக்கு சரிவர செல்லாததால், ரோஜா தனது தாய் வீட்டிலேயே 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், … Read more

தமிழகத்தில் 2022-23-ல் மீனவர்களுக்கு 93,992 கிலோ லிட்டர் டீசல் விநியோகம்

சென்னை: 2022-23 ஆம் நிதியாண்டில், விற்பனை வரி தொகை ரூ.169.27 கோடி அளவில் விலக்களிக்கப்பட்டு, விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட 93,992 கிலோ லிட்டர் டீசல் எரியெண்ணெய் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விசைப் படகிற்கு ஒரு ஆண்டிற்கு 18,000 லிட்டரும், அதாவது ஒரு விசைப் படகிற்கு 2 மாத மீன்பிடித் தடைக்காலம் தவிர … Read more

தஞ்சாவூர் அருகே பரிதாபம்.! வயலுக்குச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சியில் குடும்பம்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி இளங்கோ(56). இவர் வயலில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இளங்கோ வயலுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது வயலில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத இளங்கோ எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் … Read more

‘கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்பீர்’ – முதல்வருக்கு நினைவூட்டு கடிதம் அனுப்பும் போராட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சோழபுரத்தில் தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, தேர்தல் பரப்புரைக்கு வந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 100 நாட்களில் கும்பகோணம் தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்கப்படும் … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய வசதி; இனிமே ஆன்லைன் தான்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பலே ஏற்பாடு!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அல்லது தொலைந்து போன குடும்ப அட்டைகளுக்கு பதிலாக நகல் மின்னணு குடும்ப அட்டையினை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக இணையதளத்தில் விண்ணப்பித்து பெறும் முறை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. குடும்ப அட்டைகளின் நகல் இணையதள வழியில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையை செலுத்தவும், மீண்டும் திருத்தப்பட்ட அட்டையை பெறவும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் … Read more

Book Review: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்

Writter RN Joe D Cruz: எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ் கடலோடியாக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் கடல்சார் வாழ்வியலைப் பதிவு செய்த எழுத்தாளர்களான ப.சிங்காரம், வண்ணநிலவன், ஹெப்சிபா யேசுதாசன், ராஜம் கிருஷ்ணன் போன்ற இன்னும் பிற எழுத்துலக ஆளுமைகளில் இருந்து தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் சங்க காலம் தொட்டுச் சுமார் … Read more

வாலிபருக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.! செல்போனால் நேர்ந்த விபரீதம்.!

சென்னையில் வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன் (30). இவர் நேற்று இரவு வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து ராமச்சந்திரன் கீழே, விழுந்துள்ளார். மேலும் இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் … Read more

பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட 3 பேர் கைது..!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சின்ன கைனூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன் என்பவர், அவரது நண்பர்களான சூர்யா, சந்தோஷம் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட நிலையில், வீடியோ இணையத்தில் பரவியது. இதுகுறித்து, வனவிலங்குகளுக்கான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோலை சேர்ந்தவர்கள் ஆற்காடு வனச்சரக ரேஞ்சர் … Read more

தமிழகத்தில் தினசரி 11,000 கோவிட் பரிசோதனை: மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயித்து அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் … Read more