தலைக்கேறிய போதை, தறிக்கெட்டு ஓடிய லாரி.! விரட்டிய இளைஞர்கள்.. திரைப்படத்தை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் அருகே ஒரு லாரி ஓட்டுநர் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை நோக்கி புதுச்சேரியில் இருந்து அந்த லாரி வந்துள்ளது. அதன் ஓட்டுனர் நல்ல மது போதையில் அதிவேகமாக லாரியை செலுத்திக்கொண்டு வந்துள்ளார். அவர் கண்மண் தெரியாமல் ஓட்டுவதை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து லாரியை நிறுத்த சொல்லி விரட்டிச் சென்றனர். ஆனால், இதை சற்றும் பொருட்படுத்தாத அந்த லாரி ஓட்டுநர் தொடர்ந்து லாரியை … Read more

திமுக எம்.பி திருச்சி சிவா வீடு, கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சிசிடிவி காட்சி..!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் வீடு மற்றும் காரை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்திய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். அதன் திறப்பு விழா அழைப்பிதழ் மற்றும் பேனரில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டினர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக் கொடி காட்டிய … Read more

பொதுத் தேர்வு | கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க ஐகோர்ட் அறிவுரை

சென்னை: பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

மோடியை சந்தித்த தம்பிதுரை: எடப்பாடி அனுப்பிய தூது? என்ன காரணம்?

அதிமுகவில் டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றால் தம்பிதுரையை அனுப்புவார். தம்பி துரையும் மோடி முதல் எந்த தலைவரையும் சந்தித்து கடத்த வேண்டிய தகவலை கடத்தி உரிய பதிலைப் பெற்று எடப்பாடி பழனிசாமியிடம் சேர்த்துவிடுவார். சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை இரு அணிகளில் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதுமட்டுமல்லாமல் பாஜகவும் தாங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி … Read more

தமிழகத்தில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? அமைச்சர் மா.சு. விளக்கம்!

Minister Ma Subramanian About H3N2 Flu: சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஐஐடி நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர். இந்திய அளவில் சாலை விபத்தில் ஒரு ஆண்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையானது இன்று வெளியிடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அமைச்சர் … Read more

காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

பெரம்பூர்: நாடு முழுவதும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், தங்களின் கையில் உள்ள செல்போன்களில் வரும் சமூக வலைதளப் பக்கங்களை மேய்ந்து வரும் பள்ளி மாணவ-மாணவிகள், குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே காதல்வயப்பட்டு பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சிறுவர்கள் பலரை போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.இதில் பள்ளி மாணவிகள் முன்பின் … Read more

"அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது" – டிடிவி தினகரன்

“திமுகவுக்கு 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயர் 20 மாதங்களில் வந்துள்ளது. அமைச்சர் உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் காமெடியாக உள்ளது” என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்துக்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் … Read more

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்த எதிர்ப்பு; தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு Source link

#BREAKING: கோயில் திருவிழாக்களில் ஒலிபெருக்கியை தவிர்க்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் ..!!

சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கோயில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. அதில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிற வேளையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியால் மாணவ, மாணவிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்படும். இதனால் மாணவ, மாணவிகளின் கவனம் திசை திரும்பும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியில் உள்ள கோயிலில் பங்குனி விழாவை பள்ளி தேர்வு முடியும் வரை தள்ளி வைக்க … Read more

தேர்வு மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 பொது தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுத சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறையில் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மட்டும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அம்மாணவி தனக்கு தேர்வு எழுதி கொடுக்க நியமிக்கப்பட்ட … Read more