காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு.!

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவருடைய மகன் அபிநாத் (3) நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன அபினாத்தை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அபிநாத் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் … Read more

சிதம்பரத்தில் சோகம்.. ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ மாரடைப்பால் மரணம்..!

சிதம்பரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் மகேந்திரன் (58). இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடன் இருந்து போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி … Read more

பணிநிரந்தரம் செய்யக் கோரி சிறப்பு பயிற்றுநர்கள் தொடர் உண்ணாவிரதம்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் சென்னை டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 2 லட்சம் மாற்றுத் திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 23-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் … Read more

ஈரோட்டில் எடப்பாடி ஆடும் சடுகுடு: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க முயற்சி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சேலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து வரும் அவர் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இது குறித்து சேலம், ஈரோடு வட்டாரங்களில் விசாரிக்கும் போது முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதை அதிமுக தவிர்த்திருக்க முடியும். ஏற்கெனவே அதன் கூட்டணியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த தமாகாவிடம் இம்முறையும் வாய்ப்பை கொடுத்துவிட்டு … Read more

விராலிமலையில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா: 10-கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து மக்கள் பங்கேற்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். விராலிமலை மேலபச்சாக்குடி பெரியடம் பகுதியில்  10 ஆண்டுக்கு பிறகு இன்று மீன் பிடி திருவிழா நடைபெற்றது பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக மீன்பிடி திருவிழாவுக்காக குவிந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த வலை, கட்சா, கூடை  ,பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர். குளத்தில் நீர் வற்றி … Read more

கிருஷ்ணகிரியில் ஆறாக ஓடும் சாராயம்… திமுக பெண் கவுன்சிலர் நடத்தும் 24 மணிநேர பார்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அந்த மதுபான கடைக்கு எதிரில் நாகோஜனஅள்ளி பேரூராட்சியின் 4வது வார்டு திமுக கவுன்சிலர் காஞ்சனா என்பவரின் வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாக கூறி சகல வசதிகளுடன் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இந்த மது விற்பனையில் திமுக கவுன்சிலர் காஞ்சனா நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த டாஸ்மாக் கடையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அரசு பள்ளி அமைந்துள்ளது. திமுக … Read more

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு..!

வடகொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து சேலத்தில் இபிஎஸ், சென்னையில் ஓபிஎஸ் ஆலோசனை

சேலம் / சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் சேலத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதேபோன்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட … Read more

தெலங்கானா புதிய தலைமை செயலக திறப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஹுசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் அம்மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தலைமை செயலக கட்டிடத்துக்கும், சட்டப்பேரவைக் கட்டிடத்துக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி … Read more

மாணவியை ஆபாசமாக படம் எடுத்த ஊழியர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த பள்ளி முதல்வர்!

திருவேற்காட்டில் பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து வைத்திருந்த தனியார் பள்ளி ஊழியர், பள்ளி முதல்வரின் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக அயனம்பாக்கத்தை சேர்ந்த சசிகுமார் (என்ற) எட்வின் (21) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், தினமும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்த பள்ளியின் முதல்வர், சந்தேகத்தின்பேரில் அந்த நபரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது சசிகுமார் … Read more