அதிர்ச்சி! தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு!!

மத்திய அரசு தற்போது தயிர் பாக்கெட்டில் இந்தியை திணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதற்கான வேலையை செய்து வருகிறது. பல்வேறு வழிகளை பின்பற்றிய மத்திய அரசு தற்போது புதுமாதிரியாக தயிர் பாக்கெட்டை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அடைப்பு குறிக்குள் … Read more

கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்து..!

கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி உள்ளது. திருச்சி சாலையை ஒட்டியுள்ள இந்த கடையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புற சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் … Read more

வெளி மாநிலத் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் நிதியுதவி: தமிழக அரசு

சென்னை: விபத்துகளில் மரணம் அடையும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய … Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது

மெட்ரோ ரயில் திட்டம் இந்தியாவின் பல நகரங்களில் செயல்முறைபடுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கத்தில் உள்ளது. வாகன நெரிசல் அதிகமாக உள்ள மெட்ரோ நகரங்கள் மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் மூலம் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கிறது. சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 … Read more

கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும்: தொல்லியல்துறை அறிவிப்பு

சிவகங்கை: கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்(பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் அகழாய்வில் ஈடுபடுகின்றனர்.

விருதுநகர் : பல வருடமாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் – போலீசார் வலைவீச்சு.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் அமலன் சேவுகராஜ். இவர் அதேபகுதியில், கிளினிக் ஒன்று வைத்து நீண்டகாலமாக மருத்துவம் செய்து வந்தார்.  இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அவரிடம் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், அமலன் சேவுகராஜ் ஒரு போலி மருத்துவர். அவர் எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை என்றும், வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் … Read more

யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது – பேடிஎம்

யு.பி.ஐ மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பலரும் யு.பி.ஐ மூலம் தான் கட்டணம் செலுத்துகின்றனர். சில்லறை வியாபாரம் துவங்கி மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை, பலரும் யுபிஐ மூலம் தான் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்காக கூகுள்பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் யு.பி.ஐ பயன்படுத்தி … Read more

திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு..!

திருப்பத்தூர் மாவட்டம் சாமுடி வட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். எருதுவிடும் விழாவில் சுமார் 250 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், காளைகள் ஓடும் தடுப்புக்கட்டைகளுக்குள் பழனிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விக்ரமும் நின்றுக் கொண்டு ஓடும் மாடுகளின் வேகத்தை தடுக்க முயன்றுள்ளார். இதில், ஒரு மாடு முட்டி தூக்கி வீசியதில், அதே இடத்தில் விக்ரம் உயிரிழந்த நிலையில், உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு … Read more