புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கி.மீ விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கோவை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்க நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆன இவர் குஜராத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 3ம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். … Read more