அதிமுகவினருக்கு எடப்பாடி போடும் உத்தரவு: செயற்குழு கூடும் பின்னணி!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் செல்லும் இடமெல்லாம் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் வீடு தேடிச் சென்று ஆட்டு கிடாய், நாட்டு கோழி, வித விதமான பழங்கள் என சீர்வரிசையுடன் சென்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அமர்க்களப்படுத்தினார். இதனால் பிற முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வாறு வரவேற்பு அளிப்பது என்பது குறித்து யோசித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கட்சியின் உச்ச பதவியை பிடித்த கையோடு செயற்குழு … Read more

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கரண்ட் கட்! அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது.  இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசி கொண்டிருந்த போது திடீரென கரண்ட் கட்டானது. சிறுது நேரமாகியும் கரண்ட் வரவில்லை. அப்போது கட்சி … Read more

#கோயம்பேடு மார்க்கெட்.! (04.04.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 04/04/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 18/16/15 ஆந்திரா வெங்காயம் 12 நவீன் தக்காளி 18 நாட்டு தக்காளி 12/10 உருளை 20/15/10 சின்ன வெங்காயம் 50/45/30 ஊட்டி கேரட் 40/35/30 பெங்களூர் கேரட் 15 பீன்ஸ் 100/90 பீட்ரூட். ஊட்டி 30/28 கர்நாடக பீட்ரூட் 16/13 சவ் சவ் 20/15 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 25/20 … Read more

வரும் 7-ம் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும்

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 07.04.2023 வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள், பிற மாநில கழகச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், … Read more

நில வழிகாட்டி மதிப்பை குறைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: திமுக அரசு உயர்த்தியுள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்கஅரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை வழிகாட்டி மதிப்பு 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்தப்படும் எனவும், பதிவுக் கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக்குறைக்கவும் அரசு … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு உருவாக்கும் அறக்கட்டளை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு உருவாக்கும் அறக்கட்டளை Source link

ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே அதிவேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் 150 நகரங்களை வந்தே பாரத் ரயில் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.இந்த நிலையில் சென்னை … Read more

தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியாகிறது..!!

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். கடந்த 3 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் (ஏப்.3) நிறைவு பெற்றது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற்றன. பொதுத்தேர்வு முடிந்ததைத் தொடர்ந்து பெரும்பாலான பள்ளிகளில் நேற்று பிரிவு உபசார விழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி … Read more

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் கைது – மகளிர் ஆணையத்தில் கல்லூரி நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம்

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.13 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குபேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியர் ஹரி பத்மன்,உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், நாத்ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் … Read more