மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற மருமகன்

இந்த காலகட்டத்தில் கள்ளக்காதல் அதிகளவு பெருகி கொண்டே வருகிறது. வயது வரம்பு இன்றி கள்ள காதலால் அதிகளவு வன்முறைகள் நடந்து கொண்டே இருப்பது தொடர்கதையான ஒன்றாகி வருகிறது. இது போன்ற முறையற்ற உறவு பலரது வாழ்க்கையை சீரழித்து விடுகிறது.இது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை … Read more

கடலூர் அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 2 பேர் பிடிபட்டனர்!!

கடலூர் : கடலூர் சாவடி பகுதியில் உள்ள அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் நடத்திய வாகன சோதனையில் அதில் 2 பேர் பிடிபட்டனர். புதுப்பாளையத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்தும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு, இங்கு சேர்க்கப்பட்டவர்கள்.

வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம்!

திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது. இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் … Read more

மாமல்லபுரம் : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கடலில் குதித்து தற்கொலை.!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்டு ஜாக்ஜங்கோஸ் என்பவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து  இங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்கி சொந்த நாட்டுக்கு செல்லாமல் மாமல்லபுரத்திலேயே தங்கியுள்ளார்.  பின்னர் மாமல்லபுரம் ஊர், இங்குள்ள மக்களின் அன்பு, அரவணைப்பு உள்ளிட்டவற்றை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர், வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லாமேரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இதையடுத்து, ஜாக்ஜங்கோஸ் மாமல்லபுரத்திலேயே நிரந்தரமாக தங்கி ஒத்தவாடை … Read more

செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் தாக்குதல் நடத்தினர்.. தாக்குதலுக்குள்ளான தலைமை ஆசிரியர் குருவம்மாள் பேட்டி

தங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒரு செல்போன் அழைப்புக்கு பின்னர் தான் தாக்குதல் நடத்தினர் என்றும் அந்த செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்று கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர் குருவம்மாள் கேட்டுக் கொண்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் ஆசிரியர் பாரத் மீது கடந்த 21ந்தேதி அப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோர் … Read more

நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி … Read more

மகளின் காதல் கணவனை கொன்ற தந்தையின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகன்(25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர்,  முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர்(43) என்பவரின் மகள் சரண்யாவை(21) காதலித்துள்ளார். இதற்கு சங்கர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் ஜனவரி 26ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், ஜெகனை நேற்று முன்தினம் மதியம் சங்கர் உள்பட சிலர், கிருஷ்ணகிரி டேம் கூட்ரோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வழிமறித்து, அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் சங்கர், கிருஷ்ணகிரி … Read more

”சொன்னதையும் செய்தார்; சொல்லாததையும் செய்திருக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி புகழாரம்

தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார், சொல்லாத வாக்குறுதிகள் இன்னுயிர் காக்கின்ற 48 காலை சிற்றுண்டி என இன்று நிறைவேற்றி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என அமைச்சர் சக்கரபாணி புகழாரம் சூட்டியிருக்கிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இளைய அருணா (MC) தலைமையில் … Read more