2030க்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைய வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊரக உள்ளாட்சித்துறை உத்தரவு
நெல்லை: உலக தண்ணீர் தினமான வரும் 22ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கும் நிலையில், வரும் 2030ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் இலக்கை அடைந்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை வலியுறுத்தியுள்ளது. உலக தண்ணீர் தினம் வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி இக்கூட்டத்தை நடத்துவதோடு, இக்கூட்டம் நடக்கும் இடத்தை … Read more