திருமணமாகாத விரக்தியில் செல்போன் டவரில் ஏறி நின்று இளைஞர் தற்கொலை மிரட்டல்..!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திருமணமாகாத விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு அறிவுரை கூறி, போலீசார் கீழே இறங்க வைத்தனர். ஆற்காட்டை சேர்ந்த பத்மநாபன், தந்தை முனியனிடம் திருமணம் செய்து வையுங்கள், இல்லையெனில் சொத்தை பிரித்து கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு மதுபோதையில் திரியும் பத்மநாபனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என முனியன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. Source link