ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம்! மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் சற்றுமுன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார்.    அவரின் உரையில், “ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உரையில், “மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம முறைகேடுகள் | தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை: 20 பேரிடம் வாக்குமூலம்

விழுப்புரம்: காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் காணாமல் போனது, பாலியல் சித்திரவதை, போதை மருந்து கொடுத்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருக்கும் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் 3 நாள் விசாரணையை நேற்று தொடங்கினர். விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி போலீஸ், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் … Read more

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

Tamil Nadu Legislative Assembly: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி செல்கிறார். இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இருவரும் ஒரே நாளில் டெல்லிக்கு செல்வதால் தமிழக அரசியலில் அடுத்த மாற்றம் என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதேநேரத்தில் இன்று … Read more

ஒரு கூடை சாலைமீன் ரூ.800க்கு விற்பனை: சிப்பிகுளம், கீழவைப்பார் பகுதியில் மீன்பாடுகள் மந்தம்

குளத்தூர்: சிப்பிகுளம், கீழவைப்பார் கடல் பகுதியில் மீன்பாடுகள் மந்தமாக இருந்தது. இதனால் ஒரு கூடை சாலை மீன் ரூ.800க்கு விற்பனையானது. குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம், கீழவைப்பார் கடல் பகுதியில் நிலவு வாரம் முடிந்து கடந்த சில நாட்களாக கச்சான் காற்று வீசி வருகிறது. காற்றின் வீச்சு அமைதியாக இருப்பதால் மீன்பாடுகளும் மந்தமாகவே உள்ளது. சாலை மீன் வலை, முறல் வலை என இரு பிரிவாக வலைகள் கொண்டு சென்று மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள், கடந்த … Read more

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: பாஜக – அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா?

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் காய் நகர்த்தி வருகின்றார். சில நாட்களாக பாஜகவில் இருந்த பல நிர்வாகிகள் அதிமுக‌வில் இணைந்தது மட்டுமில்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிருப்தி ஏற்படுத்தியும் … Read more

எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று… பிகினி படத்துடன் நடிகை ராதா உருக்கமான பதிவு

எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று… பிகினி படத்துடன் நடிகை ராதா உருக்கமான பதிவு Source link

#சற்றுமுன் | எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்! 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் இன்று தொடங்கியுள்ளது, தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கவனம் ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட காதலர் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.  இதற்கு சபாநாயகர் அப்பாவு இந்த சம்பவம் குறித்து நாளை … Read more

தமிழகத்தை காக்க தண்ணீர் வளங்களைக் காப்போம்: ராமதாஸ் உலக தண்ணீர் தின சூளுரை

சென்னை: தமிழகத்தின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மார்ச் 22-உலக தண்ணீர் நாள் #WorldWaterDay. மாற்றத்தினை விரைவுப்படுத்துதல் (#AcceleratingChange) எனும் முழக்கத்தை முன்வைத்து, ஐ.நா. நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளில் ஒன்றான தண்ணீர் – துப்புரவு குறிக்கோள்களை (#SDG6) அடைவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.#WaterAction நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் … Read more

புகார் மேல் புகார்.. கூட்டணி முறிவு? அல்லது ராஜினாமா? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை!

Tamil Nadu Political News: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். வருகிற 26 ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதிமுக கட்சியில் … Read more