கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

சேலம்: கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் தமிழக-கர்நாடக மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதை தடுக்க தமிழக-கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ் நகர் ஆட்சியர் ராஜா, எஸ்.பி, பத்மினி சாகு, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுத 75% வருகைப் பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்.!

பொதுத்தேர்வு எழுத 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிந்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்ட அவர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பயிர்களை நன்றாக இருக்கிறதா என சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த அரங்கில் பிள்ளையாருக்கு நடைபெற்ற … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 20-ம் தேதி தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் … Read more

ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராத தொகையை கட்டினால் தான் வண்டியை தரமுடியும் என்று கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராத தொகையை கட்டினால் தான் வண்டியை தரமுடியும் என்று கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். அயோத்தியாபட்டணம் சோதனைசாவடியில், அம்மாபேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மனோகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்து செல்லும்படி போலீசார் கூறியதையடுத்து, … Read more

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டியது அரசின் கடமை: வேல்முருகன்

சென்னை: “நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 … Read more

போலி செய்தியை நம்பி குதியாட்டம் போட்ட பாஜக; அமைச்சர் அன்பில் மகேஷ் குட்டு.!

நடந்து வரும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற செய்தி மாநிலம் முழுவதும் பேசு பொருளானது. தமிழ் தமிழ் என பேசும் திமுக ஆட்சியில் தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக வலதுசாரிகள் விமர்சனம் செய்தனர். அதைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘தற்போது நடக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 50 ஆயிரம் … Read more

திருவண்ணாமலை கோயில் அருகே இன்று பாஜக நிர்வாகி ஆக்கிரமித்த கட்டிடம் இடித்து அகற்றம்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பாஜக நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்கள் இன்று இடித்து அகற்றப்பட்டது. இதையொட்டி டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் எதிரே அம்மணிஅம்மன் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து தனிபர்கள் கட்டிடம் கட்டியிருப்பதாக இந்து அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜகவில் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு அணி மாநில … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் நாளை விசாரணை

அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை, அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு … Read more

வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!! ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை..!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. … Read more