#BigBreaking | பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சிக்கல்! ஓபிஎஸ் தரப்பு கூட்டாக பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள்  உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதே சமயத்தில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரருக்கு ராணுவ மரியாதை!!

அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவத்தினரின் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு … Read more

தருமபுரி | மின்சாரம் பாய்ந்து மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெலவள்ளி அருகே உயர் அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை உயிரிழந்தது. பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. இந்த யானையை வனத்துக்குள் இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று (மார்ச் 17) இரவு இந்த யானை பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது. … Read more

சர்வதேச பொருளாதாரக் குழு: ஆலோசனை கேட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்றிரவு (17.3.2023) முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், மக்களுக்கு சேவை செய்வதற்கான … Read more

அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்..!!

தேனி: அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாச்சல பிரதேசத்தினுடைய மேற்கு கமாக் மாவட்டத்தில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த  பிபிபி ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, டெல்லி விமானப்படை தலைமையகம் கொண்டுவரப்பட்டு … Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய பாஜக நிர்வாகி.. இடித்து தரைமட்டமாக்கிய நிர்வாகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சொந்தமான இடத்தை பாஜக பிரமுகர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படும் நிலையில், நீதிமன்ற  உத்தரவுபடி போலீசார் துணையுடன் கோவில் நிர்வாகத்தினர் மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நான்கு புறங்களிலும் முக்கியமான கோபுரங்கள் உள்ளன. அதில் வடக்கு புறமுள்ள அம்மணி அம்மன் கோபுரத்தை கட்டியவர், அம்மணி அம்மன் என்ற பெண் சித்தர் ஆவார். இவருக்குச் சொந்தமான கோவிலை ஒட்டிள்ள அம்மணி அம்மன் மடம் 23 ஆயிரத்து 800 சதுரடி பரப்பளவை கொண்டது. தற்போது இந்த மடம், … Read more

பேங்க் ஆஃப் பரோடா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிகரிப்பு.. புதிய விகிதத்தை செக் பண்ணுங்க

பேங்க் ஆஃப் பரோடா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிகரிப்பு.. புதிய விகிதத்தை செக் பண்ணுங்க Source link

“கூட்டணிக்காக சலாம் போட மாட்டேன்” – அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு சலாம் போட மாட்டேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உடலுக்கு மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் விமானப் படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் இரவு ஒரு மணி அளவில் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்ட … Read more

கைதானவரை அவரது சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்ற விவகாரம்: எஸ்எஸ்ஐ, ஏட்டு தற்காலிக பணிநீக்கம்

கிருஷ்ணகிரி: வழக்கில் கைது செய்யப்பட்டவரை, அவருக்கு சொந்தமான காரில் அழைத்து சென்ற சம்பவத்தில், தொடர்புடைய போலீஸ் எஸ்எஸ்ஐ, ஏட்டுவை, கிருஷ்ணகிரி எஸ்பி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் கடந்த 8-ம் தேதி, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராம்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீஸார் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்திற்கும், தொடர்ந்து கிளைசிறைக்கும், காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அல்லது வாடகை வாகனத்திலேயோ அழைத்து … Read more