பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அண்ணாமலை? உருவாகும் எடப்பாடி எதிர்ப்பு அணி!

பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேசிய அளவில் கூட்டணிகள் குறித்த பேச்சு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிரான வலுவான ஒரே அணியை காங்கிரஸ் அமைக்குமா, காங்கிரஸை புறக்கணித்துவிட்டு மூன்றாம் அணி உருவாகுமா என்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸை உள்ளடக்கிய ஒரே எதிர்கட்சி அணி தான் இருக்க வேண்டும் என்று திமுக தலைவரும் … Read more

அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்..!!

தேனி: அருணாச்சலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சொந்த ஊரான தேனி ஜெயமங்கலத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.

திடீரென எழுந்த அலாரம் சத்தம்.. ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பியோடிய கொள்ளையர்கள்!

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலிப்பதாக எஸ்பிஐ வங்கியின் தலைமையிடத்தில் இருந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் அங்கு சென்ற போது, கொள்ளையர்கள் இருவர் தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து ஏடிஎம் மையத்தை … Read more

Tamil News Live Updates: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Tamil News Live Updates: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது Source link

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் மனு! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்த அந்த அறிவிப்பிபடி, அ.தி.மு.க. சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்புக்கான … Read more

திரைப்பட பாணியில் நன்கொடை கேட்ட பாஜக நிர்வாகிகள் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலன் புதுக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கிரஷர் ஆலையில் நவீன் குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மேலாளர் நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், அவர் … Read more

ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை: 100 ஏக்கர் பசுமைக்குடில்கள் சேதம்

கிருஷ்ணகிரி : ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்று, ஆலங்கட்டியுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் காய்கறிகள், மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மற்றும் கோடைக் … Read more

கூட்டாக பேட்டி அளித்த திருச்சி சிவா – அமைச்சர் நேரு!

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்பி யின் வீடு மற்றும் கார் உள்ளிட்டவற்றை தாக்கினார்கள்.  இப்ப பிரச்சனையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு இன்று எம்.பி திருச்சி சிவா வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட … Read more

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும்போது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் யானை உயிரிழந்தது.

தனுஷ்கோடி டூ தலைமன்னார்.. பாக் ஜலசந்தியை இருபுறமும் நீந்தி சாதனை படைத்த பெண்!

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) என்பவர் படைத்துள்ளார். ஆழம் குறைந்த ஆபத்தான கடல் பகுதி! பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த … Read more