சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் அருகே 60 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து முகாமிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான யானைகள் கர்நாடக மாநிலம் பன்னருகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட … Read more

ஈரோட்டில் பணப்பட்டுவாடா புகார்.. டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவு..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பணப்பட்டுவாடா குறித்து பேசியதற்கு தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் தமிழக பாஜக சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் அளித்தார். இந்த இரண்டு புகார்கள் மீதும் தமிழக டிஜிபி … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்தது..!

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.நவம்பர் மாதம் 5-ந்தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.தற்போது 43 ஆயிரத்தை தாண்டி ஒரு சவரன் விற்பனையாவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி … Read more

அண்ணாமலை – இபிஎஸ் சந்திப்பு எதிரொலி | அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு 

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்து இருந்த நிலையில், மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்று வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், … Read more

பாஜக ரொம்ப டேஞ்சர்… வார்னிங் கொடுத்த பொன்னையன்; ஈபிஎஸ் எடுக்கும் முடிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தொண்டர்கள் யார் பக்கம்? மக்களின் வாக்குகள் யாருக்கு? பாஜக ஆதரவு யாருக்கு? போன்ற கேள்விகள் எழுகின்றன. இதில் பாஜகவின் ஆதரவு என்ற விஷயம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இடைத்தேர்தலுக்கு ஆதரவு ஏனெனில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பாஜக தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலுக்கு … Read more

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில் 16 செ.மீ மழை பதிவு

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி ஊத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை நாலுமுக்கு 13 செ.மீ, காக்கச்சி 12 செ.மீ, மாஞ்சோலை, வேளாங்கண்ணி, நீடாமங்கலத்தில் தலா 10 செ.மீ, நன்னிலம், நாகை, திருவாரூரில் தலா 9 செ.மீ, திருப்பூண்டி, திருக்குவளையில் 8 செ.மீ, மன்னார்குடியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அண்ணா 54-வது நினைவு தினம்: முதல்வர் தலைமையில் திமுக சார்பாக அமைதிப் பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பாக அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரையில் நடைபெற்ற அமைதி பேரணியை திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமை தாங்கினார். பின் பேரணியாக அண்ணா நினைவிடம் வந்து மலர் வளையம் … Read more