நாமக்கல்: மூன்று தட்டு பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை தட்டித் தூக்கிய இளைஞர்

நாமக்கல்லில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் 3 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞர் 5 ஆயிரம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். நாமக்கல் – மோகனூர் சாலையில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் காலித் என்ற பிரபல பிரியாணி கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று அதிக அளவில் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி நடைபெற்றது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ. 5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம்.!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கையில் இன்று காலை கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. மேலும் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

ஒரே ஒரு அறிக்கையால்… ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்த கெளதம் அதானி..!!

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக, உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருந்த கெளதம் அதானி 15-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதானி என்டர்பிரைசஸ் 28.45 சதவீதம், அதானி போர்ட்ஸ் 19.69 சதவீதம், அதானி டோட்டல் கேஸ் 10 சதவீதம், அதானி … Read more

சித்த மருத்துவ படிப்புகளுக்கு பிப்ரவரி 11 முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: சித்த மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதில் உள்ள 330 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல, 26 தனியார் கல்லூரிகளில் 1,990 இடங்கள் உள்ளன. இதில் 1,469 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும், 521 இடங்கள் நிர்வாக … Read more

டெல்லிக்கு ஆள் அனுப்பிய எடப்பாடி: அடுத்தகட்ட நகர்வு என்ன?

இரட்டை இலைக்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் இரு தரப்பும் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் … Read more

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை அறிவிப்பு!

நாகை: கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1- முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று(03-02-2023) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை: சந்தேகத்திற்கிடமான நபரை சோதனை செய்ததில் சிக்கிய அமெரிக்க டாலர்கள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இளையராஜா சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாததால் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்துள்ளார். அதில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக எழும்பூர் ரயில்வே … Read more

தர்மபுரி :: பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி சுந்தரி. இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது செமிபாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள், இவர்களது மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய கணவன்-மனைவி இருவரும் … Read more