நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்!

உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கும் என்றால், நம்மில் பலருக்கும் பிரியாணி என்பது தான் பதிலாக இருக்கும். அந்த அளவுக்கு இன்று பிரியாணி நிறைய பேருக்கு விருப்ப உணவாக உள்ளது. அதிலும் பிரியாணியை வீட்டில் சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், நிறைய பேருக்கு ஹோட்டலில் சாப்பிடுவது தான் பிடிக்கும். அதனால் தான் நம்ம ஊரில் பிரியாணியை மட்டும் தயார் செய்யும் நிறைய பிரியாணி கடைகள் உள்ளது. அதிலும் 100 ரூபாய் கொடுத்து விட்டு இஷ்டம் போல பிரியாணி சாப்பிடுங்கள் என்றால்… … Read more

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 13 ஆடுகள் பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், விவசாயி. இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல தனது வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அனைத்து ஆடுகளையும் அடைத்து விட்டார். இன்று காலை மீண்டும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல பட்டிக்கு பார்த்திபன் சென்றபோது, அங்கு மர்ம விலங்குகள் கடித்து 13 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு … Read more

`சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு கருத்துக்களை சொன்னவர் நீதிபதியா?’-வலுக்கும் எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை … Read more

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திற்கு ஒரு நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு Source link

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறைத்தண்டனை – போக்குவரத்து துறை அறிவிப்பு.!

புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களது பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி. மேலும், இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தல் அவசியம். அதேபோல் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கு முதல் முறை ரூ.1000 அபராதம் … Read more

சூளகிரி போராட்டம் உளவுத்துறையின் தோல்வி: இபிஎஸ் கண்டனம்

சென்னை: “கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை உணர தவறியது உளவுத்துறையின் தோல்வி” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணகிரி,சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் திருவிழாவிற்கு காரணமேயின்றி அனுமதி மறுத்து,ஒசூர் நெடுஞ்சாலையே ஸ்தம்பித்துப் போகும் அளவு மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள இந்த அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். கண்ணீர்புகை வீசி கட்டுப்படுத்தும் அளவிற்கு போராட்டம் வலுத்திருப்பதை … Read more

10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் – ஐகோர்ட் பரபரப்பு கருத்து!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு … Read more

பறக்கையில் புதிய நெல்கொள்முதல் நிலையம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையால் மாவட்ட நிர்வாகம் கடந்த சில வருடங்களாக 9 நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்கொள்முதல் செய்து வருகிறது. இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோ நெல் ரூ.20.15க்கு கொள்முதல் ெசய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொடுத்து பணத்தை பெற்று வருகின்றனர். பறக்கை நெல்கொள்முதல் நிலையம் புத்தளத்தில் இயங்கி வந்தது. இதனால் பறக்கையில் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் நெல் பயிர்களை அறுவடை செய்து புத்தளத்திற்கு கொண்டு செல்ல … Read more

`இந்த கருவி இருந்தா… சாலை விபத்துகளை தடுக்கலாம் சார்’- கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்!

வந்தவாசியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தும் கண்காட்சியில், `வெப்பநிலைக்கு தகுந்தார் போல் இயங்கும் கருவி’ மற்றும் `விபத்து ஏற்படாமல் இருக்க சென்சார் மூலம் வாகனத்தை நிறுத்தும் கருவிகள்’ முதலியவற்றை கண்டுபிடித்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் செயல் திறன் படைப்புகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பள்ளி மாணவர்களின் படைப்புகளை இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் … Read more

கோவை : வங்கியில் வாங்கிய கடன்.! வளர்ப்பு நாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிய அதிகாரிகள்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் தொழில் அதிபர் பாபுகுமார். இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவர் அந்தக் கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை.  இதனால், அவரது வீடு ஏலத்திற்கு வந்தபோது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை நானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் தெரிவித்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டுள்ளனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் … Read more