மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு எதிரொலி: ஓட்டல்களில் தங்குபவர்களின் விவரங்கள் புகை படங்களுடன் தெரிவிக்க வேண்டும்.! உரிமையாளர்களுக்கு டிஎஸ்பி உத்தரவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாளை முதல் மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்து ரதம், அர்ஜுணன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து, புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்காக, மாமல்லபுரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரிசார்ட்களின் உரிமையாளர்கள், மேலாளர்களை … Read more

மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும் – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்! 

பேரறிஞர் அண்ணா என்றும் வாழ்கிறார், இன்றும் ஆள்கிறார் என்று, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அவரின் அந்த கடிதத்தில், “தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால், கருத்துமிக்க நாடகங்களைப் படைப்பதில் தமிழ்நாடு கண்ட பெர்னாட்ஷா, மக்கள் நலன் காக்கும் கொள்கைவழிப் பயணத்தில் மற்றொரு கார்ல் மார்க்ஸ் என உலகப் பேரறிஞர்கள் – பெருந்தலைவர்களுடன் ஒப்பிடத்தக்க உன்னதத் தலைவராம், நம் இதயத்தை அரசாளும் மன்னராம், காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் … Read more

பாஜக ஆதரவு யாருக்கு ? நாளை அறிவிப்பு ..!!

சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 471 நாட்கள் அண்ணாமலை தலைமையில் நடைபயணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு … Read more

முதியவர் மீது பின்னால் வந்த கனிமவளம் ஏற்றி சென்ற மினி லாரி மோதி விபத்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் ஓரமாக சைக்கிளை நிறுத்திய முதியவர் மீது பின்னால் வந்த மினி லாரி மோதும் விபத்து காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இலஞ்சி நான்கு முக்கு பகுதியில், மாணிக்கம் என்ற முதியவர் மீது மோதிய மினி லாரி, ஓரமாக சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. முன்னால் சென்ற லாரியை, மினி லாரி ஓட்டுநர் முந்திச்செல்ல முயற்சித்ததால் விபத்து நேரிட்டது. காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

மதுரை மாநகராட்சியில் கருத்தடை பணி பாதிப்பால் பெருகிய தெரு நாய்கள்: குழந்தைகள், முதியவர்கள் அச்சம்

மதுரை: மதுரையில் மாநகராட்சி 100 வார்டுகளுக்கு 2 நாய் பிடிக்கும் வாகனங்களும், கருத்தடை செய்வதற்கு ஒரே ஒரு மருத்துவரும் மட்டுமே உள்ளதால் கருத்தடை அறுவை சிகிச்சைப் பணி பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சியில் மட்டுமே 47,000 தெரு நாய்கள் இருந்துள்ளன. அதன்பிறகு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதனால், தெரு நாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியிருக்க கூடும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தெரு … Read more

ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பதால் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு கல்தா – ராமதாஸ்

உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அவசரம் காட்டிய மத்திய அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் மட்டும் தாமதம் காட்டக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் … Read more

சேலம் ரயில்வே கோட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு 6 ரயில்கள் ரத்து!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்த டங்களில் தண்டவாள சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி வரும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. இதனால், கோட்ட பகுதியில் இயங்கும் சேலம்- கோவை ரயில், விருத்தாச்சலம் ரயில் உள்பட 6 ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, கோவை – சேலம் எக்ஸ்பிரஸ் (06802) வரும் பிப்ரவரி 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. … Read more

தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் கடந்த 28ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் … Read more

கள ஆய்வில் முதலமைச்சர்… மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம்

கள ஆய்வில் முதலமைச்சர்… மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்ய மு.க. ஸ்டாலின் திட்டம் Source link