seeman: 'தமிழ் நாய்டு' வா..? இது வேறயா… சீமான் கடும் ஆவேசம்..!
தமிழ்நாட்டின் பெயரை வேண்டுமென்றே மத்திய பாஜக அரசு திரித்து வெளியிட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளில் சிறப்பானதைத் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் ‘TAMIL NADU’ என்ற பெயர் ‘TAMIL NAIDU’ என்று வேண்டுமென்றே திரித்து வெளியிடப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் பதவிக்கான தமது பொறுப்பையும், கடமையையும் காற்றில் பறக்கவிட்டு, இந்துத்துவ சித்தாந்தத்துடன் … Read more