ஜன.29,30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நீடிப்பதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக, நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர … Read more

அடக்கி வாசிக்கும் அண்ணாமலை: இடைத்தேர்தல் மூலம் வரும் இடி – என்ன காரணம்?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் பாஜக மட்டும் அடக்கி வாசிக்கிறது என்று விமர்சனங்கள் … Read more

அங்கன்வாடி கட்டிடம் இருந்த இடத்தை சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே துணிகரம்

வேலூர்:  தமிழகத்தில் நீர்நிலை இடங்கள், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என்று ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இடங்களை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் கலெக்டர் உத்தரவின்பேரில் குடியாத்தம் பாலாறு ஒட்டியிருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், சதுப்பேரி கால்வாய் ஆக்கிரமிப்பு, நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. தொரப்பாடி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதேசமயம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தவிர்த்து வேலூர் மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளது. இதில் … Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவர்.! கல்லால் அடித்துக்கொன்ற மனைவி.!

தென்காசி மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவரை கல்லால் அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் (48). இவரது மனைவி திரவியக்கனி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை இவர்களது வீட்டு வாசலில் இருந்து சற்று தொலைவில் பாலசுப்ரமணியன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து … Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவிற்கு முழு ஆதரவு கொடுத்த ஓபிஎஸ் அணி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரு தரப்பாக பிரிந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் … Read more

​​​​​​​“எனக்கு நீங்கள் ஓட்டுப் போடும் நாள் வரும். இல்லையென்றால்…” – சீமான் எச்சரிக்கை

மதுரை: “எனக்கு நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், ”உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப்பெரிய … Read more

தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் மழை? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “28.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 29.01.2023: வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான … Read more

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை இலை கருகல் நோயால் விவசாயிகள் வேதனை: அதிகாரிகள் அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள பல கிராமங்களில் தென்னையில் இலை கருகல் நோய் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஆனைமலை, கோட்டூர், சமத்தூர், ஒடையகுளம், ஆழியார், சேத்துமடை, கோபாலபுரம், கோமங்கலம், அம்பராம்பாளையம், வடக்கிபாளையம், நெகமம், சூலக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை இருக்கும்போது, அதற்கேற்ப தென்னை சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாள்கின்றனர். இதனால், பொள்ளாச்சி … Read more

வாங்கிய கடனை விட அதிக வட்டி; ஏதேதோ காரணம் சொன்ன நிதிநிறுவனம்: தற்கொலைக்கு முயன்ற முதியவர்!

வாங்கிய கடன் தொகையை விட அதிக வட்டி கேட்பதாக தனியார் நிதி நிறுவனத்திற்கு உள்ளேயே, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது. தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுப்ரமணி (60). இவர் பழனிசெட்டிபட்டி பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வீட்டின் பேரில் 2 லட்சத்து 90,000  ரூபாய் அடமான கடனை 60 மாத தவணையில் வாங்கியிருக்கிறார்.‌ இதனையடுத்தும் 43 மாதங்களாக தொடர்ச்சியாக 3 லட்சத்து 60,000 ரூபாய் வரை கடன் … Read more