வனத்துறைக்கு புது வரவு: துள்ளிக்குதித்து ஓடும் மூன்று மான் குட்டிகள்
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை சுதேசி மில் வளாகத்தில் வனத்துறை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிபட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து வருகின்றனர். வனவிலங்குகள் குணமடைந்தவுடன் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்து விடுவது வழக்கம். இதேபோல் கடந்த காலங்களில் நரி, முள்ளம்பன்றி, எறும்பு திண்ணி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளை காப்பாற்றி சிகிச்சையளித்து காட்டுக்குள் விட்டனர். இதற்காக வனவிலங்கு சிகிச்சை மற்றும் பாதுகாப்பகத்தினை செயல்படுத்தி வருகிறது. கால்நடைத்துறை … Read more