ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்டது ஏன்?

CM Stalin in Governor Tea Party: தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாளாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. தொடர்ந்து, ஆளுநரின் பேச்சுகளை திமுகவினர் சர்ச்சையாக்கி வந்த நிலையில், தமிழ்நாடு குறித்து அவர் பேசியிருந்தது பரந்த அளவில் எதிர்ப்பை சம்பாதித்தது.  அந்த சர்ச்சையை அடுத்து, ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரை அனைத்து பிரச்சைகளுக்கும் உச்சமாக அமைந்தது. ஆளுநரின் உரையில், அரசால் அச்சடித்து கொடுக்கப்பட்ட சில வார்த்தைகளை தவிர்த்தும், சிலவற்றை … Read more

குடமுழுக்குகளை தமிழிலேயே செய்வதற்கு விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

கோவை: ‘குடமுழுக்குகளை தமிழிலேயே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பழநி முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழில் குடமுழுக்கு நடத்த நீதி மன்றம் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தியது. அதன்படி குழு அமைக்கப்பட்டு அவர்கள் அது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் … Read more

சென்னை : ரூ.94.14 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.! 3 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 94.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப் பின் … Read more

பிப்.1-ல் இடைத்தேர்தல் வேட்பாளரை அறிமுகம் செய்யும் தேமுதிக..!!

தேமுதிக தலைமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு (98) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் திரு.S.ஆனந்த்,M.Sc., அவர்களை அறிமுகம் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்டத்தில் ஸ்ரீ ஜனனி திருமண மண்டபம் , சக்தி மெயின் ரோடு, CNC கல்லூரி எதிரில் (01.02.2023) புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த … Read more

திருத்தணியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்ததால் விபரீதம்

திருத்தணி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வருவாய்த்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு திரி தயாரிக்க மூலப்பொருட்களை வழங்கியதாக எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் முகமது அலி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை, மேட்டுத் தெரு பகுதியிலுள்ள பட்டாசுக் கடை ஆகியவற்றிற்கு சீல் வைத்தனர். புகாரின்பேரில் முகமது அலியை கைது … Read more

இந்து மக்கள் கட்சி பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு – மாநில மாநாடு மட்டும் நடத்திக் கொள்ள உத்தரவு

சென்னை: கடலூரில் நாளை சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாட்டை மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்திக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் ஜன.28-ம் தேதி (இன்று) கடலூரில் வள்ளலாரின் 200-வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29-ம் தேதி சனாதன இந்து தர்ம எழுச்சிப் பேரணியும், மாலையில் மாநில மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி இந்து மக்கள் … Read more

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

தஞ்சை: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம மெலட்டூர் அருகே ஏரவாடி வடக்கு தெருவை சேர்ந்த 62 வயது நாகராஜன் என்ற குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. நாகராஜன், ஏரவாடியில்  பலகாரக் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பலகாரம் வாங்குவதற்காக வந்த மாணவியிடம் செய்த சில்மிஷத்தால் 27 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் இந்த முதியவர். … Read more

மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம்

மதுரை: பிரதமர் மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பி, மதுரை மாணவி அசத்தினார். ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி டால்கொடரா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் நேரடியாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணொலி வாயிலாகவும் மாணவ, மாணவியர் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி அஸ்வினி,  பிரதமரிடம் முதல் கேள்வியை எழுப்பினார். மாணவி, … Read more

ஆசிரியர் தகுதி தேர்வுத்தாள்-2க்கான நியூ அப்டேட்! 30 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்-2 தேர்வுக்கான கால அட்டவணையையும், ஹால்டிக்கெட்டுக்கான அறிவிப்பையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம். முக்கிய அப்டேட்டாக ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்-2 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்களில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்யாதவாறு புகைப்படம் ஒட்டாமலும், கையொப்பம் போடாமலும் … Read more