ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து.. முதல்வருக்கு தொலைபேசி மூலம் ஆளுநர் ரவி ஸ்பெஷல் அழைப்பு..!!

தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே அரசியல் ரீதியில் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகிறது. ஆளுநர் ரவி பங்கேற்கும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம், இந்துத்துவா கொள்கைகளை பற்றி பேசுவதால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேபோன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களுக்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். மேலும் கடந்த ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரின் … Read more

திருவண்ணாமலையில் மெய்சிலிர்த்த பக்தர்கள்!! ஆனந்த தாண்டவம் ஆடிய துருக்கி நாட்டு பெண்..!!

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த ஆலயத்தில் மலையே சிவலிங்கமாக திகழ்கிறது. இந்த கோவிலிலுக்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்குகின்றனர். அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை தினமான 22-ம் தேதியன்று அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில் … Read more

அறநிலையத் துறைக்கான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம் விளக்கம்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், … Read more

அண்ணாமலை வாழ்க எனும் திமுக அமைச்சர்கள்… என்ன சொல்றீங்க மிஸ்டர் ஹெச்.ராஜா?

தென்காசி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது, பொங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க என்று முழக்கத்துடன் காலையில் எழுகின்றனர். … Read more

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய கண்ணாடி போன்ற பொருள்! காப்பாற்றிய மருத்துவர்கள்!

பொள்ளாச்சி நெகமம் பகுதியை சேர்ந்த ஏழு மாத ஆண் குழந்தை இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உள் நோக்கி குழாய் செலுத்தி பரிசோதனை செய்த போது  அயல் பொருள் (கண்ணாடி போன்ற பொருள்) மூச்சுக்குழாயில் சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இணைந்து குழந்தைக்கு உடனடியாக … Read more

திருச்செந்தூர், செங்கோட்டை மார்க்க பயணிகள் கோவை ரயிலை நெல்லையில் பிடிக்க வசதி

நெல்லை: திருச்செந்தூர், செங்கோட்டை மார்க்க பயணிகள் நாகர்கோவில் – கோவை ரயிலை நெல்லையில் பிடிக்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை, குமரி மற்றும் தென்மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ், நெல்லையில் இருந்து காலை 8.50 மணிக்கு  புறப்பட்டு கோவை செல்கிறது. இதனால் திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்களில் ஏறி நெல்லை வரும் பயணிகள் இந்த ரயிலை பிடிக்க முடியாமல் திண்டாடினர். செங்கோட்டை – நெல்லை பயணிகள் … Read more

2012ல் தனியார் பேருந்திலிருந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் – வெளியானது தீர்ப்பு

தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் 2012ஆம் ஆண்டு 2-ம் வகுப்பு படித்து வந்தார் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஆவார். தினமும் பள்ளிக்கூட பேருந்தில் பள்ளிக்கு செல்லும் ஸ்ருதி, 2012 ஆண்டு ஜூலை 25ஆம் தேதி வீடு திரும்பி கொண்டிருந்தபோது, மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த … Read more

‘விஜயை இன்னும் குழந்தையா நான் நினைப்பதால் சில தவறுகள் நடந்திருக்கலாம்’: மனம் திறந்த எஸ்.ஏ.சி

‘விஜயை இன்னும் குழந்தையா நான் நினைப்பதால் சில தவறுகள் நடந்திருக்கலாம்’: மனம் திறந்த எஸ்.ஏ.சி Source link

பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த 6 வயது மாணவி வழக்கில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!!

தாம்பரம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த 6 வயதான ஸ்ருதி என்ற மாணவி, பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து உயிரிழந்தார். தமிழ்நாட்டை உலுக்கிய இந்த துயர சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றது. பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட மொத்தம் 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை … Read more

தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு

சென்னை: “தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதில் சி.பி.ஐ(எம்) பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரையே சர்ச்சை ஆக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதைத் தொடர்ந்து அலையலையாக எழுந்த எதிர்ப்பிற்கு பின் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும், சட்டமன்றத்தில் இருந்து … Read more